மழை பாதிப்புகளை தடுக்க 2 ஆயிரம் மணல் மூட்டைகள் தயார்

மழை பாதிப்புகளை தடுக்க 2 ஆயிரம் மணல் மூட்டைகள் தயார்
X

செய்யாறில், மணல் மூட்டைகளை தயார்ப்படுத்தும் தொழிலாளர்கள். 

செய்யாறு ஒன்றியத்தில், மழை வெள்ள பாதிப்புகளை தடுக்கும் வகையில், 2 ஆயிரம் மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு ஒன்றியத்தில், மழை வெள்ள பாதிப்புகளை தடுக்கும் வகையில் 2 ஆயிரம் மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

மாவட்ட ஆட்சியர் முருகேஷ் அறிவுறுத்தலின் பேரில், செய்யாறு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், செய்யாறு ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட கிராமப் பகுதிகளில், நீர் நிலைகளில் பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக தற்காலிக சீரமைப்பு பணி மேற்கொள்ள வசதியாக, தொழிலாளர்கள் மூலம் சுமார் 2 ஆயிரம் மணல் மூட்டைகள் தயார்படுத்தும் பணி நிறைவு கட்டத்தை எட்டியுள்ளது. இந்த மணல் முட்டைகள், வெள்ளப் பாதிப்புகளுக்காகவும், அவசரத்தேவைக்காக பயன்படுத்தப்படும் என, வட்டார வளர்ச்சி அலுவலர் மயில்வாகனன் தெரிவித்தார்.

Tags

Next Story
ai marketing future