கீழ் செட்டிபட்டு கிராமத்தில் மக்களுடன் முதல்வர் திட்டம்

திருவண்ணாமலை வட்டாரத்தில் மக்களுடன் முதல்வர் திட்டம் 2 இன்று 11ந் தேதி தொடங்கப்படவுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் கீழ்செட்டிப்பட்டு , மேல்செட்டிப்பட்டு , சா வல்பூ ண் டி , நல்லவன்பாளளயம், சானானந்தல் , கீழ் கச்சிரா பட்டு , மேல்கச்சி ரா பட்டு ஆகிய கிராமங்களுக்கு கீழ்செட்டிப்பட்டு கிராமத்தில் முகாம் நடைபெறவுள்ளது.
இம்முகாமில் விவசாய பெருமக்கள் கலந்து கொண்டு வேளாண்ம துறை சார்ந்த திட்டங்களில் பயனடையுமாறு திருவண்ணாமலை மாவட்ட வேளாண் இணை இயக்குநர் (பொறுப்பு) உமாபதி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
2024-25ஆம்ஆண்டிற்கு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின்கீழ் பயன்பெறுவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 177 கிராம பஞ்சாயத்துகளில் உள்ள விவசாயிகள் திட்டத்தில் பயனடைய ஆதார், பட்டா சிட்டா அடங்கல் வங்கி புத்தக நகல் புகைப்படம் ஆகிய ஆவணங்களுடன் முகாமில் கலந்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது. தனிப்பட்ட விவசாயிகளின் தரிசு நிலங்களில் முட்புதர்களை அகற்றி சமன் செய்ய உழுதல் (50சதவீதம் மானியம் அல்லது ஹெக்டேருக்கு ரூ.9600) வரப்புகளில் பயிர் சாகுபடியை ஊக்குவித்தல் (50சதவீதம் மானியம் அல்லது ஹெக்டேருக்கு ரூ.300) ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மைசெயல்விளக்கம் (50சதவிதம் மானியம் அல்லது ஹெக்டேருக்கு ரூ.1500) விசை தெளிப்பான் விநியோகம் (50சதவிதம் மானியம் அல்லது ஹெக்டேருக்கு ரூ.3000) தமிழ்நாடு சிறுதானிய இயக்கத்தின்கீழ் பயன்பெறுவதற்கு ஆதார், பட்டா சிட்டா அடங்கல் வங்கி புத்தக நகல் புகைப்படம் ஆகிய ஆவணங்களுடன் முகாமில் கலந்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மற்றும் பட்டியலின மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு (வகுப்புச் சான்று அவசியம்) 70 சதவித மானியத்தில் சிறுதானிய தொகுப்புவிநியோகம் (அதிகபட்சமாக ரூ.2100 ஹெக்டேர் மானியம்) இதர விவசாயிகளுக்கு 50 சதவித மானியத்தில் சிறுதானிய தொகுப்பு விநியோகம் (அதிகபட்சமாக ரூ.1500 ஹெக்டேர் மானியம்) இயற்கை உரம் விநியோகம் செய்தல் (40 சதவித மானியம் அல்லது ரூ.1200 ஹெக்டேர் மானியம்) வழங்கப்படும். இவ்வாறு திருவண்ணாமலை மாவட்ட வேளாண் இணை இயக்குநர் (பொறுப்பு) உமாபதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu