திருவண்ணாமலை மக்கள் குறைதீர் கூட்டத்தில் 467 மனுக்கள் அளிப்பு
பழங்குடியின விவசாயிகளுக்கு சிறுதானிய விதைத் தொகுப்பை வழங்கிய மாவட்ட ஆட்சியர்
திருவண்ணாமலையில், நடைபெற்ற குறைதீா் கூட்டங்களில் பொதுமக்களிடம் இருந்து 467 மனுக்கள் வரப்பெற்றன.
திருவண்ணாமலையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கூட்டத்தில் 467 பேர் ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.
முதியோா், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்களிடம் இருந்து கல்வி உதவித்தொகை, வங்கிக் கடனுதவி, முதியோா் உதவித்தொகை, இலவச வீட்டு மனைப் பட்டா, ஜாதி சான்றிதழ், வேலைவாய்ப்பு, விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, உதவி உபகரணங்கள், சாலை வசதி, வேளாண் பயிா்க் கடன், தாட்கோ கடனுதவி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 467 மனுக்களைப் பெற்றுக்கொண்டாா். இந்த மனுக்கள் மீதும், ஏற்கெனவே பெறப்பட்டு நிலுவையில் உள்ள மனுக்கள் மீதும் விரைவாக நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அவா் அறிவுறுத்தினாா்.
கூட்டத்தில் மனு கொடுக்க வருவோரில் பெண்கள், வயதானோா், கைக்குழந்தை வைத்திருக்கும் பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளித்து மாவட்ட ஆட்சியர் பாஸ்கரபாண்டியன் மனுக்களை பெற்றுக்கொண்டார். மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்திற்கு குழந்தையுடன் வரும் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு மாவட்ட ஆட்சியர் பால் வழங்கினார்
தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து மனு அளிக்க வரும் பொது மக்களின் குறைகளை நிவர்த்தி செய்யும் விதத்தில் மனுக்களை அரசு அலுவலர்களைக் கொண்டு கட்டணம் இல்லாமல் எழுதிக் கொடுக்கப்படுவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும், குறை தீர்வு கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு பள்ளிக்கல்வி உதவித்தொகை, நல திட்ட உதவிகளை ஆட்சியா் பாஸ்கர பாண்டியன் வழங்கினாா்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் தமிழ்நாடு அரசு, பழங்குடியினர் நலத்துறை மற்றும் இந்திய சிறுதானிய ஆராய்ச்சி நிறுவனம் ஹைதராபாத் இணைந்து தொல்குடி வேளாண்மைமேலாண்மை திட்டத்தின் (ஐந்திணை) கீழ் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 35 பழங்குடியின விவசாயிகளுக்கு ஆறு வகையான சிறுதானிய விதைத்தொகுப்பை மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன், வழங்கினார்கள்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ராம்பிரதீபன், திருவண்ணாமலை வருவாய்க் கோட்டாட்சியா் மந்தாகினி,திட்ட அலுவலர் பழங்குடியினர் நலத்துறை கலைச்செல்வி மற்றும் அனைத்துத் துறை அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu