திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரிக்கு மீண்டும் கருணாநிதி பெயர் சூட்டப்பட்டது

திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரிக்கு மீண்டும் கருணாநிதி பெயர் சூட்டப்பட்டது
X

திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரி

திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரிக்கு மீண்டும் கலைஞர் கருணாநிதி அரசு கலைக்கல்லூரி என பெயர் சூட்டப்பட்டது

எழுபதுகளில் கருணாநிதி முதல்வராக இருந்தபோது திருவண்ணாமலை அரசு கல்லூரிக்கு கலைஞர் கருணாநிதி அரசு கலைக்கல்லூரி என்று பெயரிடப்பட்டது. 77இல் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு உயிரோடு இருக்கும் ஒருவரது பெயரை எந்த அரசு நிறுவனத்திற்கும் வைக்கக்கூடாது என்ற உத்தரவால் பெயர் அகற்றப்பட்டது.

சுமார் நாற்பத்தி மூன்று வருடங்கள் கழித்து மீண்டும் திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரிக்கு கலைஞர் கருணாநிதி அரசு கலைக் கல்லூரி என்று பெயரிடப்பட்டு உள்ளது.

விழாவில் நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, எ.வ.வே.கம்பன் மற்றும் திமுக நிர்வாகிகள் கல்லூரி வளாகத்தில் மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ந்தனர். மேலும், முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் பொன்முடி, எ.வ.வேலு மற்றும் துணை சபாநாயகர் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தனர்.

Tags

Next Story
ai marketing future