இடத்தை காணோம், கிணற்றைக் காணோம்: மரத்தில் ஏறி வாலிபர் தற்கொலை மிரட்டல்

இடத்தை காணோம், கிணற்றைக் காணோம்: மரத்தில் ஏறி வாலிபர் தற்கொலை மிரட்டல்
X

மரத்தில் ஏறி தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டிய நபர் 

Suicide News -சேத்துப்பட்டு பகுதியை சேர்ந்த வாலிபர், தனது இடத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கூறி மரத்தில் ஏறி தூக்கு போட்டு தற்கொலை செய்யப்போவதாக மிரட்டல்

Suicide News -திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அண்ணா தெருவை சேர்ந்தவர் மணி. கார் டிரைவர் ஆக பணியாற்றி வருகிறார். இவருக்கு சொந்தமான வீட்டுமனை ஏழு சென்ட் உள்ளது.

அதில் ஒரு கிணறு இருந்ததாகவும் அது தற்போது இல்லை என்றும், மேலும் தனது இடம் குறைவாக உள்ளது அதை கண்டுபிடித்து தாருங்கள் எனவும் அந்த இடத்தை தனியார் திருமண மண்டப அதிபர் ஆக்கிரமிப்பு செய்துள்ளார் என கடந்த இரண்டு ஆண்டுகளாக நீதிமன்றம், மாவட்ட கலெக்டர், வட்டாட்சியர் என பல்வேறு இடங்களில் புகார் மனு கொடுத்து வந்தார்.

இதுகுறித்து வட்டாட்சியர் அலுவலகத்தில் உண்ணாவிரதம் உள்ளிருப்பு போராட்டம் காத்திருப்பு போராட்டம் ஆகியவற்றை, குறிப்பாக திங்கள்கிழமைகளில் அதிகாரிகள் மாவட்ட அலுவலகம் செல்லும் நாட்களில் நடத்தி வந்தார்.

இந்நிலையில் அதிகாரிகள் நேரில் வந்து மணிகண்டன் இடத்தை அளந்து காட்டினர். ஆனால், சரியாக அதிகாரிகள் அளக்கவில்லை என ஆகஸ்ட் 2ஆம் தேதி தாலுக்கா அலுவலகத்தில் உள்ள வேப்ப மரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார். அப்போது அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.

அதைத்தொடர்ந்து சேத்துப்பட்டு தலைமை நில அளவர், வட்டாட்சியர் கோவிந்தராஜ் மற்றும் காவல்துறையினர் முன்னிலையில் நில அளவை புத்தகத்தில் இருப்பது போல் அளந்து காட்டியும் மணிகண்டனுக்கு திருப்பி அடையவில்லை. இதைத் தொடர்ந்து மீண்டும் நேற்று மணிகண்டன் அதிகாரிகளை மிரட்டும் தோரணையில் வேப்ப மரத்தில் கயிறுடன் ஏறி தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டல் விடுத்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த வட்டாட்சியர் கோவிந்தராஜ், காவல் ஆய்வாளர் பிரபாவதி, தீயணைப்பு நிலைய அலுவலர்கள் மற்றும் நண்பர்கள், உறவினர்கள் ஆகியோர் எவ்வளவோ எடுத்துக் கூறியும், அவர்கள் பேச்சுக்கு இடம் தராமல் மணிகண்டன் மரத்திலேயே அதிகாரிகளுக்கு டார்ச்சர் கொடுத்து மிரட்டல் விடுத்து வந்தார்.

அதிகாரிகளை பணி செய்ய விடாமலும் பொதுமக்களுக்கு இடையூறு செய்வதால் அதிகாரிகள் மன உளைச்சலில் இருந்தனர். மேலும் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் குறைகேட்பு கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாமல் அதிகாரிகள் தவித்தனர்.

வேப்ப மரத்தில் ஏறி கொலை முயற்சி மேற்கொண்ட மணியை பேரூராட்சி 13வது வார்டு உறுப்பினர் கனகாவின் கணவர் ராஜேஷ் குமார், அதிமுக அவைத்தலைவர் ராமச்சந்திரன் மற்றும் நண்பர்கள் உறவினர்கள் திருமண மண்டப உரிமையாளர் ஆகியோர் இங்கு வந்துள்ளனர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திக் கொள்ளலாம் வா என அழைத்தனர். சுமார் 8 மணி நேரத்திற்கு பின் மரத்தில் ஏணி வைக்கப்பட்டு அதன் மூலம் மணி இறங்கி கீழே வந்தார்.

அவரை நண்பர்கள் உறவினர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர். அதனைத் தொடர்ந்து அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் இன்றைய பிரச்சனை தீர்ந்தது என கலைந்து சென்றனர்.

மேலும், மணியை உடனடியாக மனநல மருத்துவமனையில் சேர்க்க வேண்டும் எனவும் அடுத்த முறை இது போல் நடைபெற்றால் மிகக் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டி வரும் எனவும் அவரது உறவினர்களுக்கு அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story