வீடு வழங்கும் திட்டம் குறித்து பயிற்சி முகாம்

வீடு வழங்கும் திட்டம் குறித்து பயிற்சி முகாம்
X

சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலக மன்ற கூட்ட அரங்கில் பயிற்சி முகாம்

சேத்துப்பட்டில் வீடு வழங்கும் திட்டம் குறித்து மேற்பார்வையாளர்கள் மற்றும் கணக்கெடுப்பாளர்களுக்கு பயிற்சி முகாம் நடந்தது.

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலக மன்ற கூட்ட அரங்கில் குடிசைகள் இல்லா தமிழகம் கலைஞரின் வீடு வழங்கும் திட்ட மறு கணக்கெடுப்பு 2022 வட்டார அளவிலான பயிற்சி முகாம் நடந்தது. முகாமிற்கு திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சிகளின் செயலாளர் அறவாழி தலைமை தாங்கினார்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உதவி திட்ட அலுவலர் அருண், சேத்துப்பட்டு வட்டாட்சியர் கோவிந்தராஜ், சேத்துப்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரேணுகோபால், கோவிந்தராஜு.ஆகியோர் முன்னிலை வகித்தனர். அனைவரையும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (நிர்வாகம்) மோகன் வரவேற்றார்.

முகாமில் குடிசைகள் இல்லா தமிழகம் கலைஞரின் வீடு வழங்கும் திட்டம் 2022 திட்டம் குறித்து குடிசை வீடுகள் கணக்கெடுப்பு. பயனாளிகளை தேர்வு செய்தல் திட்ட பணிகளை விரைந்து முடித்தல் ஆகியவை குறித்து மேற்பார்வையாளர்கள் மற்றும் கணக்கெடுப்பாளர்களுக்கு கணினி மூலம் பெரிய திரையில் பயிற்சி அளிக்கப்பட்டது.

முகாமில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 49 ஊராட்சி மன்ற செயலாளர்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், மகளிர் சுய உதவிக் குழுவினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் கலைஞர் வீடு வழங்கும் திட்ட உதவியாளர் ஜெயந்தி நன்றி கூறினார்.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி