சேத்துப்பட்டில் நூதன முறையில் மூதாட்டியிடம் 6 பவுன் நகை திருட்டு

சேத்துப்பட்டில் நூதன முறையில் மூதாட்டியிடம் 6 பவுன் நகை திருட்டு
X
சேத்துப்பட்டில் நூதன முறையில் நகையை திருடி சென்ற வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

சேத்துப்பட்டு அருகே பெரணம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரேசன். இவருடைய மனைவி சுகுணா (வயது 65). இவர் சேத்துப்பட்டு வந்தவாசி சாலையில் தம்பி மகன் யுவராஜ் என்பவருக்காக காத்து கொண்டிருந்தார் அப்போது ஒரு வாலிபர் சுகுணாவிடம் வந்து, அவரிடம் பேசினார். அப்போது இந்த பகுதியில் திருடர்கள் நிறைய பேர் உள்ளனர். எனவே கழுத்தில் இருக்கும் 6 பவுன் சவரன் நகையை கழட்டி கைப்பையில் வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறினார். இதை நம்பி சுகுணா கழுத்தில் இருந்த நகையை கழற்றினார்.

உடனே வாலிபர் பேப்பரில் மடித்து தருவதாக கூறி நகையை வாங்கி வெறும் பேப்பரை மடித்து கொடுத்து விட்டு தப்பி சென்று விட்டார். பின்னர் யுவராஜ் வந்தவுடன் அவரிடம் நடந்தவற்றை கூறினார். இதையடுத்து பேப்பரை பிரித்து பார்த்தபோது நகை இல்லை. இதனால் அவர் அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து யுவராஜ் சேத்துப்பட்டு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்தில் வந்து விசாரணை நடத்தினர். மேலும் நூதன முறையில் நகையை திருடி சென்ற வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

Tags

Next Story
ai robotics and the future of jobs