திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆட்சியர் மற்றும் கூடுதல் ஆட்சியர் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆட்சியர் மற்றும் கூடுதல் ஆட்சியர் ஆய்வு
X

அனைவருக்கும் வீடு திட்ட பயனாளிகளை நேரில் சென்று ஆய்வு செய்த கலெக்டர் மற்றும் அதிகாரிகள்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை ஆட்சியர் மற்றும் கூடுதல் ஆட்சியர் ஆய்வு செய்தனர்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் புதியதாக கட்டப்படவுள்ள கூடுதல் சுற்றுலா மாளிகை இடத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் முருகேஷ் அவர்கள் நேரில் ஆய்வு செய்தார்.

பின்னர் திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியம், புது மல்லவாடி ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் கணக்கெடுக்கப்பட்டுள்ள பணிகளை வீதி வீதியாக நேரில் சென்று கலெக்டர் ஆய்வு செய்தார்.

இத்திட்டத்தில் கணக்கெடுக்கப்பட்டுள்ள பயனாளிகளை அவர்கள் தற்போது வசித்து வரும் வீட்டின் தன்மையையும் அவர்களைப் பற்றிய குறிப்புகளையும் மனுவில் கண்டவாறு உள்ளனவா என நேரில் சென்று ஆய்வு செய்தார்.

புது மல்லவாடி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் கனிம வள நிதி திட்டத்தின் கீழ் புதிய வகுப்பறை கட்டிடம் கட்டப்பட்டு வருவதை நேரில் ஆய்வு செய்தார்.

பின்பு துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியம் கமலப் புத்தூர் ஊராட்சியில் ஊராட்சி துறை சார்பில் தேசிய கிராம சுயேட்சி திட்டத்தின் கீழ் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் புனரமைக்கும் பணிகளை பார்வையிட்டார்.

ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி வளாகத்தில் இல்லம் தேடி கல்வி திட்டம் செயல்பட்டு வருவதை பார்வையிட்டு அங்கு இருந்த மாணவ மாணவிகளிடம் கலந்துரையாடினார்.

பின்னர் துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியம் மங்கலம் ஊராட்சி , சானானந்தல் ஊராட்சி , ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் புதிய கழிவறை கட்டிடம், அங்குள்ள ஏரிகள் , 15 வது நிதி குழு மாறிய திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் கிராம செயலக கட்டடம் ஆகிய பணிகளை பார்வையிட்டார்.

இந்த ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் மந்தாகினி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் கௌதமன், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

வளா்ச்சிப் பணிகள்: கூடுதல் ஆட்சியா் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம், போளூரை அடுத்த வெண்மணி ஊராட்சியில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை கூடுதல் ஆட்சியா் வீா் பிரதாப்சிங் ஆய்வு செய்தாா்.

வெண்மணி ஊராட்சியில் பிரதமரின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வீடு கட்டும் பயனாளிகளைச் சந்தித்த கூடுதல் ஆட்சியா் பணிகளை உடனடியாக முடிக்க உத்தரவிட்டாா்.

மேலும் அதிகாரிகளிடம் ஊராட்சியில் நடைபெறும் வளா்ச்சித் திட்டப் பணி மற்றும் 2022-2023 திட்டப் பணிகள் குறித்து கேட்டறிந்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பரணிதரன், பாபு, ஒன்றிய உதவிப் பொறியாளா்கள் படவேட்டான்,திவாகா், செல்வி, ஊராட்சி மன்றத் தலைவா் கணேசன், துணைத் தலைவா் இருதயம், ஊராட்சிச் செயலா் சிவக்குமாா் மற்றும் அலுவலா்கள் உடனிருந்தனா்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!