3000 லிட்டர் கள்ளச்சாராய ஊறலை கண்டுபிடித்து காவல்துறையினர் அழித்தனர்

3000 லிட்டர் கள்ளச்சாராய ஊறலை கண்டுபிடித்து   காவல்துறையினர் அழித்தனர்
X

3000 லிட்டர் கள்ளச்சாராய ஊரல் கண்டுபிடிக்கப்பட்டு கீழே கொட்டி காவல்துறையினர் அழிப்பு

ஜமுனாமரத்தூர் மலைப்பகுதியில் 3000 லிட்டர் கள்ளச்சாராய ஊரல் கண்டுபிடிக்கப்பட்டு கீழே கொட்டி காவல்துறையினர் அழித்தனர்

ஜமுனாமரத்தூர் மலைப்பகுதியில் தென்மலை அத்திப்பட்டு அருவிக்கு செல்லும் வழியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 3000 லிட்டர் கள்ளச்சாராய ஊரல் கண்டுபிடிக்கப்பட்டு கீழே கொட்டி அழிக்கப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம், ஜமுனாமரத்தூர் மலைப்பகுதியில் கள்ளச்சாராய விற்பனை நடைபெறுவதாக திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அ.பவன்குமாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி, மதுவிலக்கு அமலாக்க பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் ஏ.ராஜன் தலைமையில், போளூர் மதுவிலக்கு காவல் ஆய்வாளர் கே.புனிதா, மற்றும் காவலர்கள் நடத்திய தேடுதல் வேட்டையில், தென்மலை அத்திப்பட்டு அருவிக்கு செல்லும் வழியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 3000 லிட்டர் கள்ளச்சாராய ஊரலை கண்டுபிடிக்கப்பட்டு கீழே கொட்டி அழிக்கப்பட்டது. மேலும் இது தொடர்பான குற்றவாளிகள் யார் என்பது பற்றிய விசாரனையில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

Tags

Next Story
புதுவலவு காலனியில் களைகட்டிய சமுதாயக்கூட திறப்பு விழா..!