களம்பூர் பேரூராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி

களம்பூர் பேரூராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி
X

நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

களம்பூர் பேரூராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த களம்பூர் பேரூராட்சியில் நெகிழி ஒழிப்பு கலைநிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பேரூராட்சி தலைவர் பழனி தலைமை வகித்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

செயல் அலுவலர் லோகநாதன் முன்னிலை வகித்தார் அலுவலர் முரளி வரவேற்றார். கலை நிகழ்ச்சி மூலம் நெகிழியால் ஏற்படும் தீமைகள், சுற்றுச்சூழல் சீர்கேடுகள் குறித்து விளக்கப்பட்டது.

மேலும் மஞ்சள் பையை பயன்படுத்த வேண்டும் எனவும் கடைகளில் நெகிழிப் பொருள்கள், பைகளை பயன்படுத்துவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் எனவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் பொதுமக்கள் , பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
டெல்லி டூ அமெரிக்கா அரை மணி நேரத்துலயா? என்னப்பா சொல்ற எலான் மஸ்க்..! | Delhi to America Flight Timings