படவேடு ரேணுகாம்பாள் அம்மன் கோவிலில், நாளை ஆடி வெள்ளி விழா ரத்து

படவேடு ரேணுகாம்பாள் அம்மன் கோவிலில்,  நாளை ஆடி வெள்ளி விழா ரத்து
X

படவேடு ரேணுகாம்பாள் கோவில்

படவேடு ரேணுகாம்பாள் அம்மன் கோவிலில், நாளை ஆடி வெள்ளி விழா ரத்து செய்யப்பட்டுள்ளது. சுவாமி புறப்பாடு நிகழ்ச்சி மட்டும் நடத்தப்படும்

போளூர் அடுத்த, படவேடு ரேணுகாம்பாள் அம்மன் கோவிலில், நாளை ஆடி வெள்ளி விழா ரத்து செய்யப்படுவதாக, கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அடுத்த படவேடு கிராமத்தில், அறநிலையத்துறைக்கு சொந்தமான, ரேணுகாம்பாள் அம்மன் கோவில் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும் ஆடி மாதத்தன்று ஆடி வெள்ளி விழா கொண்டாடப்படுவது வழக்கம். பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து, குல தெய்வ வழிபாடு நடத்துவர். அப்போது, பொங்கல் வைத்து படையலிடுதல், சிலை சுற்றுதல், அங்கப்பிரதட்சணம் வருதல், காது குத்தல் போன்றவற்றில் ஈடுபடுவர்.

இந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக, ஆடி வெள்ளி விழா ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. ஆனால், சுவாமி புறப்பாடு நிகழ்ச்சி மட்டும் நடத்தப்படும். அப்போது பக்தர்கள் சமூக இடைவெளியுடன், முகக்கவசம் அணிந்து வந்து, அம்மனை தரிசனம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது

Tags

Next Story