போலீசுக்கு பயந்து ஓடிய, மணல் திருடன் மர்ம சாவு, இறப்புக்கு போலீஸ்தான் காரணமா,

போலீசுக்கு பயந்து ஓடிய, மணல் திருடன்  மர்ம சாவு,  இறப்புக்கு போலீஸ்தான் காரணமா,
X

பைல் படம்

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே போலீசுக்கு பயந்து வீட்டை விட்டு ஓடியவர், மர்மமான முறையில் இறந்தார், பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போளூர் அடுத்த மண்டகொளத்தூர் பேட்டைதொப்பு பகுதியை சேர்ந்த முனியன் மகன் முரளி (30). விவசாயியான இவர் மாட்டு வண்டி வைத்திருக்கிறார்.

இதற்கு முன்பு செய்யாற்று படுகையில் மணல் கடத்தலில் ஈடுபட்டுள்ளார். இவர் நேற்று முன்தினம் வீட்டில் இருந்தபோது களம்பூர் காவல் நிலையத்தைச் சேர்ந்த போலீசார் இவரை தேடி வருவதாக ஒருவர் மூலம் தகவல் கிடைத்திருக்கிறது.

இதையடுத்து வீட்டில் இருந்த முரளி போலீசார் வீட்டை சுற்றி வந்ததைப் பார்த்து பயந்து ஓடி உள்ளார். அப்போது இவரை போலீசார் பின் தொடர்ந்து துரத்தியதை பொதுமக்களும் பார்த்துள்ளனர்.

உடன் வந்த இரண்டு போலீசார் வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 மாட்டு வண்டிகளில் ஒரு மாட்டு வண்டியை விட்டுவிட்டு மீதமிருந்த இரண்டு மாட்டு வண்டிகளை கட்டி களம்பூர் காவல் நிலையத்திற்கு எடுத்து சென்றுள்ளனர்.

பிறகு வீட்டில் உள்ளவர்கள் நேற்று முன்தினம் இரவு 11 மணி முதல் முரளியை தொடர்பு கொண்டபோது தொடர்ந்து செல்பேசியை எடுக்கவில்லை. வரை எடுக்கவில்லை.

இதை தொடர்ந்து அவரை காலை முதல் தேடிவந்த நிலையில் நேற்று மாலை சுமார் 6 மணியளவில் வம்பலூர் ஆற்றுப்படுகையில் அவர் பிணமாக கிடப்பதை பொதுமக்கள் பார்த்து தெரிவித்து உள்ளனர்.

அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போளூர் டிஎஸ்பி அறிவழகன் மற்றும் திருவண்ணாமலை ஏடிஎஸ்பி அசோக்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்து பிரேதத்தை கைப்பற்றி வெளியே கொண்டு வந்தனர்.

ஆனால் ஊர் பொதுமக்கள் பிரேதத்தை கொடுக்க மறுத்து வண்டி முன் அமர்ந்து நியாயம் கேட்டு போலீஸார் தான் துரத்தினார்கள் என்று கூறி தர்ணாவில் ஈடுபட்டனர்.

.பிறகு சம்பவ இடத்திற்கு வந்த திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் ரெட்டி உறவினர்களுடன் 1மணி நேரத்திற்குமேல் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் பிரேதத்தை கொடுக்க அனுமதித்து உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

இது குறித்து இறந்தவரின் மனைவி தீபா அளித்த புகாரின் பேரில் போளூர் போலீசார் சந்தேக மரணமாக வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இறந்த முரளிக்கு ஒரு வயது பெண்குழந்தை உள்ளது. குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story