போளூர் அருகே ஆற்றோரம் சடலமாக கிடந்தவர் வழக்கில் திடீர் திருப்பம்
நிலத்தில் மின்வேலி அமைத்ததால் கைது செய்யப்பட தந்தை, மகன்
போளூர் அடுத்த மண்டகொளத்தூர் பகுதியை சேர்ந்த தீபா என்பவர் அதே ஊரை சேர்ந்த பாலசுந்தரம் என்பவரின் நிலத்தின் அருகே இறந்து கிடப்பதாகவும் கணவர் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் போரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அசோக்குமார் தலைமையில் விசாரணை மேற்கொண்டனர். மேலும் இறந்தவரின் பிரேதத்தை கைப்பற்றி திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்பு உடற்கூறு ஆய்வு மேற்கொண்டு பின் பிரேதம் இறந்தவரின் மனைவியிடம் ஒப்படைக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.
பிரேத பரிசோதனை அறிக்கையில், காயம் எதுவும் இல்லை என்றும் மின்சாரம் பாய்ந்து இறந்து இருக்கலாம் என்று தெரிவித்திருந்தனர். பின்பு போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் இறந்து போன முரளி இடத்துக்கு பக்கத்தில் அதே கிராமத்தை சேர்ந்த பாலசுந்தரம் தன்னுடைய விவசாய நிலம் சுற்றி வேலி அமைத்து உள்ளார். நெற்பயிர்களை எலிகள், காட்டுப்பன்றிகள், ஆகியவற்றில் இருந்து பாதுகாப்பதற்காக சட்டவிரோதமாக மின்சார இணைப்பு கொடுத்துச் சென்றுள்ளார்.
மணல் திருட்டு வழக்கு சம்பந்தமாக விசாரணையிலிருந்து காவல் துறையிடமிருந்து தப்பிப்பதற்காக ஓடிவந்த முரளி நிலத்தில் மின்வேலியில் சிக்கி உயிரிழந்துள்ளார். அடுத்த நாள் காலையில் நிலத்துக்கு வந்த பாலசுந்தரம் முரளி இறந்து கிடந்ததை பார்த்து தன் மகனை அழைத்து உள்ளார். பின்னர் இருவரும் சேர்ந்து இறந்த முரளியின் சடலத்தை உருட்டி சென்று செய்யாற்று கரை ஓரமாக தள்ளிவிட்டு சென்றுள்ளனர்.
ஏற்கனவே போடப்பட்டிருந்த சந்தேக மரணம் வழக்கு, தற்போது மின் வேலியில் சிக்கி மின்சாரம் தாக்கப்பட்டு இறந்துள்ளதாக மாற்றப்பட்டு மின்சார சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக தந்தையும் மகனும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu