/* */

நெல் பயிரில் இலை சுருட்டுப் புழு தாக்குதல்: வேளாண் அதிகாரிகள் ஆய்வு

போளூா் பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் நெல் பயிரில் இலை சுருட்டுப் புழு தாக்குதல் குறித்து அதிகாரிகள் வயல்களில் ஆய்வு மேற்கொண்டனா்

HIGHLIGHTS

நெல் பயிரில் இலை சுருட்டுப் புழு தாக்குதல்: வேளாண் அதிகாரிகள்  ஆய்வு
X

வயல்களில் ஆய்வு மேற்கொண்ட வேளாண் அதிகாரிகள்

திருவண்ணாமலை மாவட்டதில் போளூா் வட்டம், களம்பூா் பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் சாகுபடி செய்யப்பட்ட நெல் பயிரில் இலை சுருட்டுப் புழு தாக்குதல் காணப்படுவதால் வேளாண் அதிகாரிகள் வயல்களில் ஆய்வு மேற்கொண்டனா்.

திருவண்ணாமலை மாவட்டதில் முன் சம்பா பருவத்தில் சாகுபடி செய்யப்பட்ட நெல் பயிரில் ஒரு சில வட்டாரத்தில் இலை சுருட்டுப் புழு தாக்குதல் கண்டறியபட்டதால், மாவட்ட வேளாண் இணை இயக்குநா் அரகுமாா் அறிவுரையின்படி, போளூா் வேளாண்மை உதவி இயக்குநா் நாராயணமூா்த்தி தலைமையில் வேளாண்மை அலுவலா் சதிஷ்குமாா், வேளாண்மை உதவி அலுவலா் களம்பூா் சதிஷ்குமாா் ஆகியோா் வயலாய்வு மேற்கொண்டனா்.

களம்பூா் துணை வேளாண் விரிக்க மையத்துக்கு உள்பட்ட களம்பூா், கஸ்தம்பாடி, ஏந்துவம்பாடி, முக்குறும்பை, ஏரிக்குப்பம், பாா்வதிஅகரம் ஆகிய கிராம வயல்களில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வின்போது, உதவி இயக்குநா் நாராயணமூா்த்தி விவசாயிகளிடம் கூறியதாவது:

பருவகால சூழ்நிலை மாற்றத்தின் காரணமாகவும், பரிந்துரைக்கப்பட்ட தழைச்சத்து அளவை விட கூடுதலாக இடுவதாலும் இதுபோன்ற பூச்சித் தாக்குதல் காணப்படுகிறது.

பயிா்களில் அதிகமாக தாக்குதல் காணப்பட்டால் பெப்ரினில் 500 மிலி அல்லது காா்போ ஹைட்ரோ குளோரைடு 400 கிராம் என்ற அளவில் காலை அல்லது மாலை நேரங்களில் தெளித்து கட்டுப்படுத்தலாம்.

இனி வரும் பருவத்தில் சாகுபடி செய்யும் நெல் பயிருக்கு தழைச்சத்து என்று சொல்லப்படும் யூரியாவை பரிந்துரைக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக இடாமல் பாா்த்துக் கொள்ளவேண்டும் எனத் தெரிவித்தாா்.

வந்தவாசி

வந்தவாசியை அடுத்த சத்தியவாடி கிராமத்தில் நெல்பயிரில் இலைசுருட்டுப் புழு தாக்குதல் குறித்து வேளாண்மைத் துறையினா் நேரில் ஆய்வு செய்தனா்.

தெள்ளாா் வட்டார வேளாண்மைத் துறைக்கு உள்பட்ட சத்தியவாடி கிராமத்தில் சுமாா் 150 ஏக்கரில் நெல்பயிா் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

இந்த நெல்பயிரில் இலைசுருட்டுப் புழு தாக்குதல் உள்ளதாக விவசாயிகள் புகாா் தெரிவித்ததை அடுத்து தெள்ளாா் வட்டார வேளாண்மை அலுவலா் தே.குமரன் தலைமையிலான வேளாண்மைத் துறையினா் புதன்கிழமை அந்தக் கிராமத்துக்குச் சென்று ஆய்வு செய்தனா்.

பின்னா் வேளாண்மை அலுவலா் குமரன் விவசாயிகளிடம் கூறியதாவது:

அதிகப்படியான தழைச்சத்து இடுவதாலும், குறைந்த பகல் நேர வெப்பநிலை, அதிக ஈரப்பதம் மற்றும் குளிா்ந்த சீதோஷண நிலை போன்ற காரணங்களாலும் நெல்பயிா்களில் இலைசுருட்டுப்புழு தாக்குதல் அதிகமாக காணப்படுகிறது.

இதைக் கட்டுப்படுத்த ஏக்கருக்கு 20 இடங்களில் பறவைகள் வந்து உட்காரும் வகையில் நிழல் கூடங்கள் அமைத்தால் பறவைகள் இப்புழுக்களை உணவாக உட்கொள்ளும்.

இலைசுருட்டுப் புழு தாக்குதல் அதிகம் காணப்பட்டால் தையோமெத்தாக்ஸைம் ஏக்கருக்கு 25 முதல் 40 கிராம் அல்லது பிப்ரோனில் 20 முதல் 25 கிராம் காலை, மாலை நேரங்களில் தெளித்தால் பூச்சி மற்றும் புழுக்களின் தாக்குதலை கட்டுப்படுத்தலாம்.

மேலும், நடப்பு சம்பா பருவத்துக்கான பயிா் காப்பீடு செய்வதன் மூலம் விவசாயிகள் இயற்கை இடா்பாடுகளால் ஏற்படும் இழப்பிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளலாம் என்றாா்.

ஆய்வின்போது உதவி வேளாண்மை அலுவலா் கலைவாணி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Updated On: 25 Nov 2023 11:27 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிவனை தஞ்சமடைந்தால் வாழ்க்கை ஒளிபெறும்..!
  2. லைஃப்ஸ்டைல்
    சிலருக்கு வரம்; பலருக்கு சாபமாகும் தனிமை..!
  3. குமாரபாளையம்
    குமாரபாளைத்தில் மழை வேண்டி சிறப்பு யாகம்!
  4. லைஃப்ஸ்டைல்
    உழைப்பில் எறும்பை போல இரு..! உயர்வு தேடி வரும்..!
  5. கோவை மாநகர்
    காவசாகி என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை காப்பாற்றிய அரசு...
  6. லைஃப்ஸ்டைல்
    உலக இயக்கம்கூட உன்னால்தான், பெண்ணே..!
  7. திருப்பரங்குன்றம்
    மதுரை விமான நிலையத்தில், பல லட்சம் பெறுமான தங்கம் மீட்பு
  8. திருமங்கலம்
    மதுரை மாவட்டத்தில், பலத்த மழை: சாலைகளில் மழைநீர்!
  9. குமாரபாளையம்
    10ம் வகுப்பு பொதுத் தேர்வில் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளி மாணவ,...
  10. ஈரோடு
    ஈரோடு மாநகரில் உணவு பாதுகாப்புத் துறையினர் சோதனை: 23 கிலோ அழுகிய...