திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிக மாணவர்களை சேர்த்த அரசு பள்ளிகளுக்கு பாராட்டு

திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிக மாணவர்களை சேர்த்த அரசு பள்ளிகளுக்கு பாராட்டு
X

திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிக மாணவர்களை சேர்த்த அரசு பள்ளிகளுக்கு விருது வழங்கப்பட்டது

திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிக மாணவர்களை சேர்த்த அரசு பள்ளிகளுக்கு போளூரில் பாராட்டுவிழா நடைபெற்றது

திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் அதிக மாணவர்களை சேர்த்த அரசு பள்ளிகளுக்கும், தமிழக அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற ஆசிரியர்களுக்கும், சிறந்த பள்ளிக்கான காமராஜர் விருது பெற்ற பள்ளிகளுக்கும், தேசிய வருவாய் மற்றும் திறன் படிப்பு உதவித் திட்டத்திற்கு தேர்வான மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

போளூர் கல்வி மாவட்ட அலுவலர், அலுவலக வளாகத்தில் நடைபெற்ற விழாவில் மாவட்ட கல்வி அலுவலர் கலைவாணி தலைமை தாங்கி விருதுகளை வழங்கினார்.

போளூர் கல்வி மாவட்டத்தில் அதிக மாணவர்கள் சேர்க்கையை நடத்தி களம்பூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, கலசபாக்கம் ஒன்றியம் மேல்சோழங்குப்பம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, சேத்துப்பட்டு ஒன்றியம் மன்சுரபத் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, ஜவ்வாதுமலை ஒன்றியம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகியன பாராட்டுகளையும் விருதையும் பெற்றன.

மேலும் தேசிய வருவாய் மற்றும் திறன் படிப்பு உதவித் திட்டத்தில் தேர்ச்சி பெற்ற 42 மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர்கள், பெற்றோர்கள் , மாணவர்கள் உள்பட பலரும் கலந்து கொண்டனர்

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!