சேத்துப்பட்டு ஊராட்சியில் வளர்ச்சி திட்டப் பணிகள் கலெக்டர் ஆய்வு!

சேத்துப்பட்டு ஊராட்சியில் வளர்ச்சி திட்டப் பணிகள் கலெக்டர் ஆய்வு!
X

புதிய கட்டிடங்களை ஆய்வு செய்த கலெக்டர் முருகேஷ்

சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட கலெக்டர் முருகேஷ் நேரில் ஆய்வு செய்தார்.

சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றியம் கரைப்பூண்டி ஊராட்சியில் ஆறு ஏக்கர் பரப்பளவில் 82 நரி குறவர்களின் வீட்டுமனை வழங்க உள்ள இடத்தினை கலெக்டர் முருகேஷ் பார்வையிட்டார். மேலும் மண்ட கொளத்தூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூபாய் 22 லட்சத்து 65 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் மற்றும் ஒன்றிய பொது நிதியிலிருந்து ரூபாய் 5 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் சிறு பாலம் , நம்பேடு ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் புதியதாக கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மைய கட்டிடம் மற்றும் ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிடத்தை ஆய்வு செய்தார்.

மேலும் ஊரக வளர்ச்சித் துறையின் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வரும் 100 நாள் வேலையினை பார்வையிட்டு பணிகள் குறித்து கேட்டறிந்தார். தற்போது நடைபெற்று வரும் அனைத்து வளர்ச்சி திட்ட பணிகளும் விரைந்து முடிக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு இந்த ஆய்வின் போது மாவட்ட கலெக்டர் முருகேஷ் அவர்கள் அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின்போது உதவி இயக்குனர் ஊராட்சி ரவிக்குமார், உதவி செயற்பொறியாளர் வேந்தன், ஆரணி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செந்தில்குமார், இந்திராணி, வட்டாட்சியர்கள் வெங்கடேசன், சேத்துப்பட்டு உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!