வசூர் அரசு நடுநிலைப்பள்ளியில் மறுசுழற்சி குறித்த விழிப்புணர்வு

வசூர் அரசு நடுநிலைப்பள்ளியில் மறுசுழற்சி குறித்த விழிப்புணர்வு
X

அரசுப்பள்ளியில் மறுசுழற்சி குறித்த விழிப்புணர்வு நடத்தப்பட்டது.

திருவண்ணாமலை போளூர் வட்டம் வசூர் அரசு பள்ளியில் மறுசுழற்சி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அடுத்த வசூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் உலக மறுசுழற்சி தினத்தை ஒட்டி, பள்ளி மாணவ மாணவிகளால் மறுசுழற்சி குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தப்பட்டது . இந்த ஊர்வலத்தில் மாணவ மாணவியர் பங்கேற்றனர்.

இந்த ஊர்வலத்தில் மறுசுழற்சி செய்யும் முறையையும் அதன் பயன்பாடு குறித்தும் பொதுமக்களுக்கும் மாணவர்களுக்கும் விளக்கப்பட்டது. இதன் மூலம் சுற்றுப்புற சூழலை எவ்வாறு மேம்படுத்தலாம் என எடுத்துரைக்கப்பட்டது. பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. பள்ளி தலைமை ஆசிரியர் ,ஆசிரியர்கள் மற்றும் ஆதிபராசக்தி வேளாண்மை கல்லூரி மாணவிகள் ,பேராசிரியர்கள் உள்ளிட்ட பலரும் இதில் பங்கேற்றனர்.

Tags

Next Story
ai solutions for small business