கண்ணமங்கலத்தில் செல்போன் டவரில் ஏறி தற்கொலைக்கு முயன்ற தொழிலாளி

கண்ணமங்கலத்தில் செல்போன் டவரில் ஏறி தற்கொலைக்கு முயன்ற தொழிலாளி
X

செல்போன் டவரில் ஏறி தற்கொலைக்கு முயன்ற தொழிலாளி.

கண்ணமங்கலத்தில் செல்போன் டவரில் ஏறி தற்கொலைக்கு முயன்ற தொழிலாளியை போலீசார் மீட்டனர்.

கண்ணமங்கலம் பகுதியில் உள்ள ஏரியில் பொதுப்பணித்துறை சார்பில் மீன் பிடிக்க மீனவர்களின் சங்கத்தினருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏலம் விடப்பட்டது. இந்த நிலையில் கண்ணமங்கலம் ஏரியில் பொதுமக்கள் மீன் பிடிப்பதை தடை செய்யவேண்டும் என, இன்று காலை கண்ணமங்கலம் செம்படவர் தெருவை சேர்ந்த ரமேஷ் (வயது48) என்ற தொழிலாளி அப்பகுதியில் உள்ள செல்போன் டவரில் ஏறி தற்கொலைக்கு முயன்றார்.

தகவலறிந்த கண்ணமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாலமோன்ராஜா மற்றும் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் ஆரணியில் இருந்து தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து ரமேஷை மீட்டனர். கண்ணமங்கலம் போலீசார் ரமேஷிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!