ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு பொதுமக்கள் பூட்டு போட்டு போராட்டம்
ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு பூட்டு போட்டுபோராட்டம் செய்த கிராம மக்கள்.
https://www.maalaimalar.com/news/district/tiruvannamalai-news-the-public-locked-the-panchayat-council-office-and-protested-488138?infinitescroll=1
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த கரிக்கலாம்பாடி ஊராட்சியில் சுமார் 2,500-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
ஊராட்சியில் பொதுமக்களின் அடிப்படை வசதிகளான குடிநீர் மற்றும் 100 நாள் வேலை திட்டத்தில் முறைகேடுகள் நடப்பதாகவும், மற்றும் 100 நாள் வேலை திட்டத்தில் புதிய அட்டைகள் வழங்க ஒரு நபருக்கு 1500 ரூபாய் கேட்பதாகவும், வீடுகளுக்கு தனிநபர் உறிஞ்சி குழியை தானே கட்டி தருவதாக பொதுமக்களை ஏமாற்றி பல லட்சம் ரூபாய் முறைகேடு செய்ததாகவும், பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் ஒரு பயனாளியிடம் தலா 30 ஆயிரம் ரூபாய் வசூல் செய்ததாகவும் உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகளை கண்டித்து ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு பூட்டு போட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து வந்த கீழ்பென்னாத்தூர் போலீசார் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் காந்திமதி ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், 100 நாள் வேலை திட்டத்தில் புதிய அட்டை வேண்டி விண்ணப்பித்தவர்களுக்கு உடனடியாக புதிய அட்டை வழங்கப்பட்டது
மற்றவர்களுக்கும் விரைவில் அட்டை வழங்கப்படும் என்று கூறினார். அதைத்தொடர்ந்து முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டது. .
இது குறித்து ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தனிடம் கேட்டபோது, தனிநபர் உறிஞ்சிக்குழாய் சம்பந்தப்பட்ட பயனாளிகளின் வீடுகளுக்கு அமைத்துக் கொடுத்ததற்கான பணம் கேட்டதாகவும், இதனை யாரோ தூண்டி விட்டதின்பேரில் போராட்டம் நடந்ததாகவும், மேலும் அடிப்படை வசதிகள் உடனடியாக செய்து தருவதாகவும், தினசரி ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு இனி வந்து செல்வதாகவும் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu