வேட்டவலத்தில் கல்லறை திருநாள்

வேட்டவலத்தில் கல்லறை திருநாள்
X

கல்லறை தோட்டத்தில் சிறப்பு பிரார்த்தனை செய்த கிறிஸ்தவர்கள்

கிறிஸ்தவர்கள் கல்லறை திருநாளில் மறைந்த முன்னோர்களுக்கு கல்லறை தோட்டத்தில் சிறப்பு பிரார்த்தனை செய்தனர்

கிறிஸ்தவர்கள் கல்லறை திருநாளில் மறைந்த முன்னோர்களுக்கு கல்லறை தோட்டத்தில் சிறப்பு பிரார்த்தனை செய்தனர்

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் தொகுதி வேட்டவளத்தில் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் கல்லறை திருநாளையொட்டி திருக்கோவிலூர் சாலையில் அமைந்துள்ள கல்லறை தோட்டத்திற்கு சென்று இறந்த தங்கள் உறவினர்களின் கல்லறைகளை தூய்மைப்படுத்தி மாலை அணிவித்து மலர் தூவி மெழுகுவர்த்தி ஏற்றி மலர் வளையும் வைத்து அவர்களுக்கு பிடித்த உடைகள் உணவுகளை படைத்தும் உறவினர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

தொடர்ந்து கல்லறை தோட்டத்தில் வேட்டவலம் புனித தூய நெஞ்ச ஆலய பங்குத்தந்தை ஆரோக்கியசாமி , மறைந்த ஆத்மாக்கள் இளைப்பாற சிறப்பு கூட்டு திருப்பலி நடத்தி கல்லறைகளை புனிதப்படுத்தினார் . இதேபோல வேட்டவலம் மறை வட்டத்திற்குட்பட்ட ஆவூர் , ஜமீன் கூடலூர், சாணி பூண்டி ஆகிய பகுதிகளில் உள்ள கல்லறை தோட்டங்களில் ஏராளமான கிறிஸ்தவர்கள் தங்கள் முன்னோர்களின் கல்லறைகளுக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மெழுகுவர்த்தி ஏற்றி சிறப்பு பிரார்த்தனை செய்து கல்லறை திருநாளை அனுசரித்தினர்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில் நடைபெற்ற கல்லறை திருநாள் பெருவிழாவில் சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது

செய்யாறு தூய வியாகுல அன்னை ஆலயப் பகுதியில் உள்ள கல்லறையில் நடைபெற்ற இந்த

கல்லறை திருநாள் பெருவிழாவில், இறந்த முன்னோா்களுக்காக அவரவா்களின் உறவினா்கள் கல்லறைகளில் மலா் மாலைகள் வைத்து, மெழுகுவா்த்தி ஏற்றி வழிபட்டுச் சென்றனா்.

நிகழ்ச்சியின் போது ஆலயத்தின் பங்குத்தந்தை அருட்பணி சுதா்சன் பங்கேற்று உறவினா்கள் புடை சூழ அனைத்து கல்லறைகள் முன் சிறப்பு பிராத்தனை செய்தாா். இதில் ஏராளமான இறை மக்கள் கலந்து கொண்டனா்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!