/* */

வேட்டவலம் அருகே வீட்டின் கதவை உடைத்து நகை-பணம் திருட்டு

வேட்டவலம் அருகே வீட்டின் கதவை உடைத்து ரூ.2½ லட்சம் நகை-பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

HIGHLIGHTS

வேட்டவலம் அருகே வீட்டின் கதவை உடைத்து நகை-பணம் திருட்டு
X

2 பீரோக்கள் உடைந்து அதில் இருந்த பொருட்கள் சிதறிக் கிடந்தன

திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலத்தை அடுத்த கல்லாய் சொரத்தூர் கூட்ரோட்டில் வசித்து வருபவர் தண்டபாணி (வயது 50), ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். கடந்த 23-ந்தேதி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன், உறவினரின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள, சென்னைக்கு சென்றுள்ளார்.

தண்டபாணியின் அண்ணன் மனைவி சீதா வீட்டு வாசலில் தண்ணீர் தெளிக்க வந்துள்ளார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு, அவரது மகன் சூர்யாவுக்கு தகவல் தெரிவித்துள்ளார். உடனே அவர் அங்கு வந்து வீட்டிற்குள் சென்று பார்த்த போது, 2 பீரோக்கள் உடைந்து அதில் இருந்த பொருட்கள் சிதறிக் கிடப்பதையும், பின்புற கதவு திறந்து இருப்பதையும், மேலும் வீடுகள் முழுவதும் மிளகாய் பொடி தூவி இருப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து, வேட்டவலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் திருவண்ணாமலை மாவட்ட துணை கண்காணிப்பாளர் (பொறுப்பு) ராஜன், வேட்டவலம் சப்-இன்ஸ்பெக்டர் சுமன் மற்றும் தனிப்பிரிவு காவலர் சசிகுமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர் கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர்.

தண்டபாணி வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் பீரோவை உடைத்து அதில் இருந்த 7 பவுன் நகைகள் மற்றும் ரூ.20 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்றது தெரியவந்தது. அதன்மதிப்பு ரூ.2½ லட்சம் இருக்கும். இதுகுறித்து தண்டபாணி கொடுத்த புகாரின் பேரில், வேட்டவலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Updated On: 27 April 2022 6:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  2. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  3. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  5. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  6. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  7. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு
  8. லைஃப்ஸ்டைல்
    புரதச் சத்துக்களைத் தவிர்க்க மக்களை வலியுறுத்தும் ஐசிஎம்ஆர் மருத்துவக்...
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி முக்கொம்பு மேலணையின் ஷட்டர் பழுதுபார்ப்பு பணி துவக்கம்
  10. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தில் இலவச இருதய மருத்துவ முகாம்..!