ஆசிரியர்கள் பங்கேற்ற பள்ளி பரிமாற்ற நிகழ்ச்சி

ஆசிரியர்கள் பங்கேற்ற பள்ளி பரிமாற்ற நிகழ்ச்சி
X

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியர்கள் பங்கேற்ற பள்ளி பரிமாற்ற நிகழ்ச்சி நடைபெற்றது.

மங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியர்கள் பங்கேற்ற பள்ளி பரிமாற்ற நிகழ்ச்சி நடைபெற்றது

திருவண்ணாமலையை அடுத்த மங்கலம்புதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளி பரிமாற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கிராமப்புற பள்ளியை நகரப்புற பள்ளிகளுடன் இணைக்கும் விதமாக எரும்பூண்டி அரசினர் உயர்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர்களை, மங்கலம்புதூர் பள்ளி ஆசிரியர்களும், மாணவர்களும் பள்ளி பட்டதாரி ஆசிரியர்களை வரவேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பின்னர் எரும்பூண்டி பள்ளியில் கல்வி வளர்ச்சி குறித்தும் அப்பகுதி நிகழ்வுகள் குறித்தும் மங்கலம்புதூர் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.இதேபோன்று மங்கலம்புதூர் பட்டதாரி ஆசிரியர்கள், எரும்பூண்டி பள்ளிக்கு சென்று பள்ளி வளர்ச்சி மற்றும் நிகழ்வுகள், சிறப்புகள் குறித்து கலந்துரையாடல் செய்யும் வகையில் இந்த பள்ளி பரிமாற்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. நிகழ்ச்சியில் பள்ளி பயிற்றுநர் ராமஜெயம் மற்றும் பென்னி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்