இருளர் சமுதாய மக்களுக்கு மனைப்பட்டா: கோட்டாட்சியர் நேரில் ஆய்வு

இருளர் சமுதாய மக்களுக்கு மனைப்பட்டா: கோட்டாட்சியர் நேரில் ஆய்வு
X

வீட்டு மனைப்பட்டா குறித்து ஆய்வு மேற்கொண்ட கோட்டாட்சியர்

கீழ்பென்னாத்தூர் வட்டத்தில் இருளர் சமுதாய மக்களுக்கு மனைப்பட்டா வழங்குவது குறித்து கோட்டாட்சியர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் வட்டத்தில் சாமுண்டிபுரம் கிராமத்தில் 15 பேரும், கத்தாழம்பட்டு கிராமத்தில் ஓருவர், மானவரம் கிராமத்தில் 4 பேர் என 20 இருளர் சமுதாய குடும்பத்தினர் இலவச மனைப்பட்டா கோரி மனு அளித்திருந்தனர்.

இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக 20 பேருக்கும் மனைப்பட்டா வழங்குவதற்கான இடங்களை திருவண்ணாமலை கோட்டாட்சியர் வெற்றிவேல் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பயனாளிகளிடம் நேரில் விசாரணை நடத்தினார்.

இந்த ஆய்வின்போது கீழ்பெண்ணாத்தூர் வட்டாட்சியர் வைதேகி, வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags

Next Story
ai marketing future