திருவண்ணாமலை அருகேயுள்ள கூத்தாண்டவர் கோவில் தேரோட்டம்
வேடந்தவாடி கிராமத்தில் உள்ள கூத்தாண்டவர் கோவிலில் தேரோட்டம் நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம், துரிஞ்சாபுரம் ஒன்றியம் மங்கலத்தை அடுத்த வேடந்தவாடி கிராமத்தில் உள்ள கூத்தாண்டவர் கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை மாதம் ரத உற்சவம் நடப்பது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு விழா கடந்த 1-ந்தேதி தொடங்கியது. தினமும் மகாபாரத சொற்பொழிவும், இரவில் சொற்பொழிவு தொடர்பான தெருக்கூத்தும் நடந்தது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கூத்தாண்டவர் கோவில் தேர் திருவிழா நடந்தது. இந்த ஆண்டு ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட தேரில் உற்சவர்களான விநாயகர், கூத்தாண்டவர், காமாட்சியம்மன் தனித்தனியாக சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். திரளான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து தேர் இழுத்தனர்.தேரோட்டத்தில் திருநங்கைகள் பலர் பங்கேற்று ஒப்பாரி வைத்தனர். அதன் பிறகு திருநங்கைகளின் தாலி அகற்றும் நிகழ்ச்சி நடந்தது. விழாவில் சுற்று வட்டாரக் கிராமங்களில் இருந்து வந்திருந்த திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu