கீழ்பெண்ணாத்தூரில் கிராம சபை கூட்டம்
கிராம சபை கூட்டத்தில் பேசிய துணை சபாநாயகர்
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் ஒன்றியம் சு.பொலக்குணம் ஊராட்சியில் காந்தி ஜெயந்தி முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் குப்பு ஜெயக்குமார் தலைமை வகித்தார் . மாவட்ட கவுன்சிலர் ஆறுமுகம், வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் உமா, மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு. பிச்சாண்டி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில்
திமுக ஆட்சியில்தான் கிராமங்கள் வளா்ச்சி அடையும் வகையில் சாலை வசதி, குடிநீா் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளும், எண்ணற்ற திட்டங்களும் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டு வருகின்றன.
மகளிருக்கு ரூபாய் ஆயிரம் உரிமைத் தொகை, அரசுப் பேருந்தில் இலவச பயணம் போன்றவை உட்பட மகளிருக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் இந்த ஆட்சியில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன என பேசினார்.
தொடா்ந்து, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை கு.பிச்சாண்டி பெற்றுக் கொண்டாா். இந்த மனுக்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவா் கூறினாா். தொடா்ந்து, ஊராட்சியின் வரவு-செலவு கணக்குகள் பொதுமக்கள் பாா்வைக்கு வைக்கக்கப்பட்டது.
கிராமத்துக்குத் தேவையான குடிநீா் வசதி, சாலை வசதி, தெரு விளக்கு போன்ற அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவது என்பன உள்பட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், ஊராட்சி செயலாளா் பாஸ்கரன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
சோமாசிபாடி
கீழ்பென்னாத்தூரை அடுத்த சோமாசிபாடி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்துக்கு, ஊராட்சித் தலைவா் ஏழுமலை தலைமை வகித்தாா். வேளாண் ஆலோசனைக் குழுத் தலைவா் சிவக்குமாா், மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் அன்பழகன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலா் அசோக், ஒன்றியக்குழு உறுப்பினா் குப்புசாமி, ஊராட்சி துணைத் தலைவா் ரேகா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில், வடகிழக்கு பருவமழையால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்கும் வகையில் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது, கொசு மூலம் பரவும் டெங்கு காய்ச்சலைத் தடுக்கும் நடவடிக்கை எடுப்பது, குழந்தைத் திருமணங்களை தடுப்பது குறித்து பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu