மாப்பிள்ளை பிடிக்காத காரணத்தால் எலி மருந்து சாப்பிட்டு இளம்பெண் சாவு

மாப்பிள்ளை பிடிக்காத காரணத்தால்  எலி மருந்து சாப்பிட்டு இளம்பெண் சாவு
X

பைல் படம்.

கீழ்பென்னாத்தூரில் எலி மருந்து சாப்பிட்டு இளம்பெண் பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை.

கீழ்பென்னாத்தூர் அருகே கழிக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி, விவசாயி. இவரது மகள் நளினி (வயது 23). இவருக்கு வரன் பார்த்து திருமணம் செய்ய பெற்றோர் முடிவு செய்தனர். மாப்பிள்ளை பிடிக்காத காரணத்தாலும், தன்னைவிட அதிக வயது வித்தியாசத்தில் தனக்கு பொருத்தம் இல்லாதவரை திருமணம் செய்து வைப்பார்கள் என நினைத்த நளினி வீட்டில் வைத்திருந்த எலி மருந்தை சாப்பிட்டு மயங்கி கிடந்தார்.

உடனடியாக அவரை திருவண்ணாமலை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனா். பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கீழ்பென்னாத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!