வேட்டவலம் அருகே கஞ்சா விற்ற கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் கைது

வேட்டவலம் அருகே கஞ்சா விற்ற கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் கைது
X
வேட்டவலம் அருகே கஞ்சா விற்ற கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம்,வேட்டவலம் அருகே நெய்வாநத்தம் கிராமத்தில் வேட்டவலம் காவல் உதவி ஆய்வாளர் ராமச்சந்திரன் மற்றும் தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது நெய்வாநத்தம் ஏரிக்கரையில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில், இருசக்கர வாகனத்தில் நின்றிருந்த 2 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். இதில், அவர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுகா நாகலாம்பட்டு கிராமத்தை சேர்ந்த குபேந்திரன் என்பவரின் மகன் விக்னேஷ் (வயது 26), மற்றொருவர் 18 வயதுடைய கல்லூரி மாணவர் உள்பட, 3 பேரை கைது செய்து, அவர்களிடம் இருந்த 410 கிராம் கஞ்சாவையும், இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு