உரக்கடை முன்பு விவசாயிகள் நூதன போராட்டம்

உரக்கடை முன்பு விவசாயிகள் நூதன போராட்டம்
X

தனியார் உரக்கடை முன்பு விவசாயிகள் தரையில் பாய் போட்டு நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை அருகே, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், யூரியா வாங்க விவசாயிகள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

திருவண்ணாமலையை அடுத்த நாயுடுமங்கலம் கூட்ரோடு அருகில், தனியார் உரக்கடை முன்பு விவசாயிகள் தரையில் பாய் போட்டு நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், விவசாயிகளுக்கு யூாியா கிடைப்பதில்லை. வெளி மாவட்டங்களுக்கு கொண்டு சென்று கள்ளச்சந்தையில் விற்கப்படுவதை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.

போதுமான அளவு யூரியா வழங்கப்பட்டுள்ள திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களாக யூரியா தட்டுப்பாடு உள்ளது. கீழ்பெண்ணாத்தூர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் உரங்களில் கலப்படம் செய்யப்பட்டு அதிக விலைக்கு விற்கப்படுவதை, அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.

கண்ணமங்கலத்தை அடுத்த கம்மவான்பேட்டை கிராமத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் யூரியா வாங்க விவசாயிகள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

Tags

Next Story
why is ai important to the future