உழவர்நலத்துறை சார்பில் விவசாயிகள் கண்டுணர்வு சுற்றுலா

உழவர்நலத்துறை சார்பில் விவசாயிகள் கண்டுணர்வு சுற்றுலா
X

வேளாண்மை மற்றும் உழவர்நலத்துறை சார்பில் கூட்டுப்பண்ணையம் தலைப்பில் மாவட்டத்திற்குள் கண்டுணர்வு சுற்றுலா சென்ற விவசாயிகள்.

திருவண்ணாமலையில், வேளாண்மை மற்றும் உழவர்நலத்துறை சார்பில் கூட்டுப்பண்ணையம் தலைப்பில் மாவட்டத்திற்குள் விவசாயிகள் கண்டுணர்வு சுற்றுலா சென்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம் புதுப்பாளையம் வட்டாரம், மாநில விரிவாக்க சீரமைப்பு திட்டம், வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் மூலம், புதுப்பாளையம் வட்டார விவசாயிகளை ஒருங்கிணைத்து, வேளாண்மை இணை இயக்குநர் க.முருகன் வழிகாட்டுதலின் பேரில், ஜெ.கோபாலகிருஷ்ணன் வட்டார தொழில்நுட்பக்குழு அமைப்பாளர் / வேளாண்மை உதவி இயக்குநர் புதுப்பாளையம் முன்னிலையில், துரிஞ்சாபுரம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.

இச்சுற்றுலாவில் கூட்டுப்பண்ணையம் திட்டம், விவசாயிகள் ஆர்வலர் குழு உறுப்பினர்களின் செயல்பாடுகள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் அமைத்தல், குழு பதிவேடுகள் பராமரிப்பு, கூட்ட நடவடிக்கைகள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் செயல்பாடுகள், வேளாண் விளைப்பொருட்களை கொள்முதல் செய்தல், விதைப்பண்ணை அமைத்தல், மதிப்பூகூட்டி விற்பனை செய்தல், பற்றி உதவி வேளாண்மை அலுவலர்(வேளாண் வணிகம்) தனபால், விவசாயிகளுக்கு விளக்கமாக கூறினார்.

கூட்டுப்பண்ணைய திட்டத்தில் மானிய விலையில் பெறப்பட்ட மரச்செக்கு, தீவனம் அரைக்கும் இயந்திரம், உளுந்து உடைக்கும் இயந்திரம், நிலக்கடலை உடைக்கும் இயந்திரம், மாவு அரைக்கும் இயந்திரம் பற்றி விவசாயிகள் நேரடியாக பார்வையிட்டு அறிந்து கொண்டனர்.

இச்சுற்றுலாவில் வட்டார தொழில்நுட்ப மேலாளர் பு.செ.சங்கீதா, வட்டார தொழில்நுட்ப மேசத்தியநாராயணன், சரவணன் உதவி தொழில்நுட்ப மேலாளர், மணிவண்ணன் உழவர் உற்பத்தியாளர் நிறுவன இயக்குநர் ஆகியோர் கலந்துகொண்டனர். இதில் 50 விவசாயிகள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.

Tags

Next Story