கீழ்பெண்ணாத்தூர் ஏரியில் முதியவர் சடலம்

கீழ்பெண்ணாத்தூர் ஏரியில் முதியவர் சடலம்
X
கீழ்பென்னாத்தூர் அடுத்த வழுதலங்குணம் கிராம ஏரியில் முதியவர் சடலம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த வழுதலங்குணம் கிராம ஏரியில் சுமார் 65 வயது மதிக்கத்தக்க முதியவரின் சடலம் இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் பிரபாகரன் கீழ்பெண்ணாத்தூர் போலீசில் புகார் கொடுத்தார்.

காவல் நிலைய உதவி ஆய்வாளர் மணிவண்ணன் மற்றும் காவல்துறையினர் சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து கீழ்பெண்ணாத்தூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!