கீழ்பென்னாத்தூர் அருகே கோணலூர் கிராமத்தில் நாடக மேடை திறப்பு

கீழ்பென்னாத்தூர் அருகே கோணலூர் கிராமத்தில் நாடக மேடை திறப்பு
X

கோணலூர் கிராமத்தில் நாடக மேடையை இன்று துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி திறந்து வைத்தார்

கோணலூர் கிராமத்தில் நாடக மேடையை மக்களின் பயன்பாட்டிற்காக இன்று துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி திறந்து வைத்தார்

கீழ்பென்னாத்தூர் தொகுதி கோணலூர் கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் புதியதாக அமைக்கப்பட்ட நாடக மேடையை மக்களின் பயன்பாட்டிற்காக இன்று தமிழக சட்டப்பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி திறந்து வைத்தார்கள்.

இந்த ஊரடங்கு நேரத்தில் நாடக கலைஞர்களுக்கு தமிழக அரசு பல சலுகைகளை வழங்கியுள்ளது. அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அவர்களுக்கு ஊக்கத்தொகையும் வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். நாடகக் கலைஞர்கள் இந்த நாடக மேடையை நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

விழாவில் கோணலூர் ஒன்றிய தலைவர் மற்றும் வட்டார அலுவலர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர். நாடக கலைஞர்கள் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!