மக்களின் மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து துணை சபாநாயகர் ஆய்வு

மக்களின் மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து  துணை சபாநாயகர் ஆய்வு
X

மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து துணை சபாநாயகர் ஆய்வு

கீழ்பென்னாத்தூா் தொகுதி மக்களின் மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி ஆய்வு செய்தார்.

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூா் சட்டப்பேரவைத் தொகுதி மக்களின் மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தமிழக சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி ஆய்வு செய்தார்.

இந்தத் தொகுதியில் நடைபெற்ற கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தமிழக சட்டப்பேரவை துணைத் தலைவரும், தொகுதி எம்எல்ஏவுமான கு.பிச்சாண்டி அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டார். அப்போது பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை அவரிடம் பொதுமக்கள் கொடுத்தனா். இந்த மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட வருவாய் அலுவலா் இரா.முத்துக்குமாரசாமியிடம் பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி வழங்கினாா்

Tags

Next Story
ai future project