தீபாவளிக்கு இலவச வேட்டி சேலைகள் வழங்கிய துணை சபாநாயகர்
துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி இலவச வேட்டி, சேலைகளை பயனாளிகளுக்கு வழங்கினார்
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் தாலுகாவில் உள்ள 77 கிராமங்களில் வசிக்கும் அரசின் முதியோர் உதவித்தொகை உள்பட பல்வேறு உதவி தொகைகளை பெறும் பெண்கள் 8,486 பேருக்கும், ஆண்கள் 3,334 பேருக்கும் என மொத்தம் 11,820 பேருக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ், இலவச வேட்டி, சேலைகள் வழங்கும் நிகழ்ச்சி கீழ்பென்னாத்தூர் தாலுகா அலுவலகத்தில் நடந்தது.
நிகழ்ச்சிக்கு சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். மாவட்ட கவுன்சிலர் ஆராஞ்சி ஆறுமுகம், நகர செயலாளர் அன்பு, முன்னாள் பேரூராட்சி தலைவர் பன்னீர்செல்வம், பேரூராட்சி தலைவர் சரவணன், துணைத்தலைவர் தமிழரசி சுந்தரமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டாட்சியர் சக்கரை வரவேற்றார்.
நிகழ்ச்சியில் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி கலந்துகொண்டு இலவச வேட்டி, சேலைகளை வழங்கி பேசினார். இதில் தலைமையிடத்து துணை தாசில்தார் வட்டாட்சியர் தனபால், மண்டல துணை வட்டாட்சியர் வேணுகோபால், வருவாய் ஆய்வாளர் நந்தகோபால், கிராம நிர்வாக அலுவலர்கள் சுதாகர், பிரவீன்குமார், பேரூராட்சி கவுன்சிலர்கள் பாக்யராஜ், ஜீவா மனோகர், அம்பிகாராமதாஸ், மணி, ஒன்றிய பிரதிநிதி அருள்மணி, நகர துணை செயலாளர் இளங்கோ, வட்ட செயலாளர் செல்வம் உள்பட பலரும் கலந்துகொண்டனர்.
செங்கம்
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி காரியமங்கலம் ஊராட்சியில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு தீபாவளி முன்பணம் போனஸ் தொகையாக ரூபாய் 3.10 லட்சத்தினை செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர்கள் சகுந்தலா ராமஜெயம் ஒன்றிய கழக செயலாளர் செந்தில்குமார் கூட்டுறவு சங்க தலைவர் சங்கர் மாதவன் மேல் பெண்ணாத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் விஜய் பால் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் அரசு அலுவலர்கள் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
செய்யாறு
திருவண்ணாமலை மாவட்டம், திருவத்திபுரம் (செய்யாறு) நகராட்சியில் புதிதாக அமைக்கப்பட்ட சிமெண்ட் சாலை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவைக்கப்பட்டது.
நகராட்சி 15-ஆவது வாா்டு ஆதிகேசவன் தெருவில், சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.5 லட்சத்தில் அமைக்கப்பட்ட இந்தச் சாலை திறப்பு நிகழ்ச்சிக்கு நகா்மன்றத் தலைவா் மோகனவேல் தலைமை வகித்தாா். துணைத் தலைவா்.குல்சாா் வரவேற்றாா்.
சிறப்பு விருந்தினராக செய்யாறு தொகுதி எம்.எல்.ஏ. ஜோதி கலந்து கொண்டு சாலையை மக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைத்தாா். நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சித் தலைவா் பாா்வதி சீனிவாசன், நகா்மன்ற உறுப்பினா் கே.விஸ்வநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
கலசப்பாக்கம்
கலசப்பாக்கம் தொகுதியில் நடைபெற்று வரும் திட்ட பணிகளை சரவணன் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார். துரிஞ்சாபுரம் ஒன்றியம் பெரியகிளாம்பாடி ஊராட்சியில் ஏற்கனவே பழுதடைந்து உள்ள ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தை இடித்துவிட்டு அதே இடத்தில் ரூ.16 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டப்பட்டு வருகிறது. மேலும் சிறுக்கிளாம்பாடி பகுதியில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் காரிய நிகழ்ச்சி மேடையும் கட்டப்பட்டு வருகிறது இப்பணிகளை சரவணன் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.
அப்போது மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் பாரதிராமஜெயம், வட்டார வளர்ச்சி அலுவலர் லட்சுமி, என்ஜினியர் அருணா உள்பட அதிகாரிகள் உடன் இருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu