திருவண்ணாமலை அருகே நெல் விற்ற விவசாயிகளிடம் மோசடி செய்த தம்பதி கைது

திருவண்ணாமலை அருகே நெல் விற்ற விவசாயிகளிடம் மோசடி செய்த தம்பதி கைது
X

கைது செய்யப்பட்ட தம்பதியினருடன் போலீசார் உள்ளனர்.

திருவண்ணாமலையை அருகே விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்துவிட்டு மோசடி செய்த தம்பதியை போலீசார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை அருகே விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்து, ரூ. 5 கோடி வரை மோசடி செய்ததாக தம்பதியை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து ரூ.2.50 லட்சம் ரொக்கம், கார், புல்லட் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் அடுத்தசோ.கீழ்நாச்சிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ஜெய்கணேஷ் . இவர் பள்ளிகொண்டாப்பட்டு கிராமத்தில் `நம்மாழ்வார் அக்ரோ பார்ம்ஸ்' என்ற பெயரில் நெல் கொள்முதல் நிலையம் அமைத்து, விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்து வந்துள்ளார். மேலும் , தனது அலுவலகத்தை வேட்டவலம்- திருவண்ணாமலை பைபாஸ் சாலையிலுள்ள ஏந்தல் கிராமத்தில் நடத்தி வந்த அவர் ஆரம்பத்தில் நெல் கொள்முதல் செய்ததற்கான தொகையை உடனுக்குடன் வழங்கி வந்துள்ளார். எனவே, ஏராளமான விவசாயிகள் ஜெய்கணேஷ்க்கு தொடர்ந்து நெல் மூட்டைகளை விற்பனை செய்துள்ளனர்.

பானிபூரி விரும்பி சாப்பிடுவீங்களா? உங்களுக்கு கேன்சர் வரலாமாம்!

இதைத்தொடர்ந்து, ஜெய்கணேஷ் கடந்த 6 மாதங்களாக தன்னிடம் நெல் விற்பனை செய்த விவசாயிகளுக்கு பணத்தை நேரடியாக வழங்காமல் காசோலை மூலம் வழங்கி வந்துள்ளார். அந்த காசோலையை விவசாயிகள் வங்கியில் செலுத்தியபோது, அவரது வங்கிக்கணக்கில் பணம் இல்லை என்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து இன்று, நாளை என காலம் கடத்தி வந்த நிலையில், சமீபத்தில் அலுவலகத்தையே பூட்டி விட்டு ஜெய்கணேஷ் தலைமறைவாகி விட்டார்.

இதனால் பாதிக்கப்பட்ட 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள், ரூ.5 கோடி வரை மோசடி செய்தஜெய்கணேஷ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், அவரிடமிருந்து பணத்தை பெற்றுத்தர வேண்டும் என கடந்த வாரம் திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். மேலும், கீழ்பென்னாத்தூர் மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் பலரும் கீழ்பென்னாத்தூர் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தனர்.

இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், உத்தரவின் பேரில் , கீழ்பென்னாத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி, சப்-இன்ஸ்பெக்டர் பிரபு ஆகியோர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

உலகிலேயே மிக நீ........ளமான மிதிவண்டி! எங்க இருக்கு தெரியுமா?

இந்நிலையில், ஜெய்கணேஷ் சென்னை ரெட்டேரியில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில், போலீசார் விரைந்து சென்று ஜெய்கணேஷ் மற்றும் அவரது மனைவி சுதா ஆகிய 2 பேரையும் கைது செய்து, கீழ்பென்னாத்தூர் காவல் நிலையத்திற்கு அழைந்து வந்து தீவிர விசாரனை நடத்தினர். தொடர்ந்து, அவரிடமிருந்து ரூ.2.50 லட்சம் ரொக்கம், கார் மற்றும் புல்லட் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர், ஜெய்கணேஷ் மற்றும் அவரது மனைவி சுதா ஆகிய 2 பேரையும் போலீசார் மாஜிஸ்திரேட்டு முன் ஆஜர் படுத்தி அவரது உத்தரவின்பேரில் சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
ai solutions for small business