புதிய வேளாண் விற்பனை கூடம் கட்டும் பணி துவக்கம்!

புதிய வேளாண் விற்பனை கூடம் கட்டும் பணி துவக்கம்!
X

புதிய வேளாண் விற்பனை கூடம் கட்டும் பணியை துவக்கி வைத்த துணை சபாநாயகர் பிச்சாண்டி மற்றும் எம்எல்ஏ சரவணன்

கலசப்பாக்கம் பகுதியில் புதிய வேளாண் விற்பனை கூடம் கட்டும் பணி, துணை சபாநாயகர் தொடங்கி வைத்தார்

திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் யூனியனுக்கு உட்பட்ட நாயுடு மங்கலம் ஊராட்சியில் ரூபாய் 2. 50 கோடியில் புதிய வேளாண் விற்பனை கூடம் கட்டும் பணியை சட்டப்பேரவை துணை சபாநாயகர் பிச்சாண்டி பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை சேர்மன் பாரதி இராம ஜெயம், ஒன்றிய குழு தலைவர் தமயந்தி, முன்னாள் ஒன்றிய குழு தலைவர் அண்ணாமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக சட்டப்பேரவை துணை சபாநாயகர் பிச்சாண்டி கலந்து கொண்டு வேளாண் விற்பனை கூடத்தை தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார் . அப்போது அவர் பேசுகையில்

துரிஞ்சாபுரம் யூனியன் உட்பட்ட நாயுடு மங்களம் ஊராட்சியில் புதிய வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகவரித்துறை மூலம் ஒரு வேளாண் விற்பனை கூடம் வேண்டும் என்று சட்டமன்ற கூட்டத்தில் முதலமைச்சரிடமும், பொதுப்பணித்துறை அமைச்சரிடமும், வேளாண்மை துறை அமைச்சரிடமும், சட்டப்பேரவை துணை சபாநாயகர் ஆகிய நானும், கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் அவர்களும் சட்டமன்ற கூட்டத்தில் கோரிக்கை வைத்தோம்.

அதன் அடிப்படையில் வேளாண் விரிவாக்க மையம் துவங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நாயுடு மங்களப் பகுதியில் புதிய வேளாண் விற்பனை கூடமும் கலசப்பாக்கம் பகுதியில் புதிய வேளாண் விற்பனை கூடமும் அமைப்பதற்கு நிதி ஒதுக்கப்பட்டு அதற்குண்டான அரசாணையும் வழங்கப்பட்டது. அதன் மூலம் கடந்த வாரம் கலசபாக்கத்தில் புதிய வேளாண் விற்பனை கூடம் அமைப்பதற்கு ரூபாய் இரண்டு கோடி மதிப்பீட்டில் பூமி பூஜை செய்து தொடங்கி வைக்கப்பட்டது. இப்பொழுது வேளாண் விற்பனை கூடம் வேளாண்மை விரிவாக்க மையமும் நாயுடு மங்கலத்தில் அமைப்பதற்கு ரூ 2.50 கோடி மதிப்பீட்டில் நிதி ஒதுக்கீடு செய்து அதன் மூலம் புதிய வேளாண் விரிவாக்க மையம் கட்டுவதற்கு இடத்தையும் தேர்வு செய்து வேளாண் விரிவாக்க மையம் அமைப்பதற்கு இப்பொழுது பூமி பூஜை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் இப்பகுதியில் உள்ள நாயுடு மங்கலம் மற்றும் பெரிய கலாம்பாடி, ஆகிய பகுதிகளில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் மூலம் விவசாய மக்கள் முழுமையாக பயனடையலாம். மேலும் இப்பகுதி விவசாயம் நிறைந்த பகுதி, அதனால் இந்த பகுதியில் வேளாண் விற்பனை கூடம் அமைப்பதற்கு அப்பகுதி மக்கள் கேட்டுக்கொண்டனர். மக்கள் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் இந்த வேளாண் விரிவாக்க மையம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

இதனால் இந்தப் பகுதி விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதனால் முதலமைச்சர் அவர்களுக்கும், பொதுப்பணித்துறை , வேளாண்மை துறை அமைச்சர்களுக்கும் நன்றி கூற வேண்டும்.

மேலும் தமிழக அரசு அறிவிக்கும் பல நல்ல திட்டங்கள் அனைத்தும் உடனுக்குடன் பெற்றுக் கொடுப்பதற்கும் நானும் , எம் எல் ஏ சரவணன் தயாராக உள்ளோம் என்று சட்டப்பேரவை துணை சபாநாயகர் கூறினார்.

நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள் , மாவட்ட கவுன்சிலர்கள் , உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!