/* */

திருவண்ணாமலை: வீட்டின் பூட்டை திறந்து 15 பவுன்நகை, ரூ.5 லட்சம் திருட்டு

கீழ்பென்னாத்தூர் அருகே ம விவசாயி வீட்டின் பூட்டை திறந்து பீரோவில் வைத்திருந்த 15 பவுன்நகைகள், ரூ.5 லட்சம் திருடப்பட்டது.

HIGHLIGHTS

திருவண்ணாமலை: வீட்டின் பூட்டை திறந்து 15 பவுன்நகை, ரூ.5 லட்சம் திருட்டு
X

திருட்டு நடைபெற்ற விவசாயி மணியின் வீடு.

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூரை அடுத்த காட்டுநல்லான்பிள்ளை பெற்றாள் கிராமத்தில் வசிப்பவர் மணி (வயது 50), விவசாயி. இவர் நேற்று பகலில் வீட்டை பூட்டிவிட்டு சாவியை வழக்கம்போல் அருகில் உள்ள ஜன்னலுக்குள் வைத்துவிட்டு குடும்பத்துடன் விவசாய நிலத்துக்குச் சென்று வேளாண் பணிகளில் ஈடுபட்டுள்ளார்.

மணி, வேலை முடிந்ததும் இரவு வீட்டுக்கு திரும்பி வந்தார். பூட்டை திறக்க சாவியை எடுத்தபோது, கதவு திறந்திருந்தது. திடுக்கிட்ட மணி வீட்டுக்குள் நுழைந்து பார்த்தபோது, பீரோ திறந்து கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பீரோவை பூட்டி விட்டு அதன் சாவியை அருகிலேயே வைப்பது வழக்கம். யாரோ மர்மநபர்கள் பீரோ சாவியை எடுத்து திருட்டில் ஈடுபட்டு இருப்பது தெரிய வந்தது.

பீரோவை பார்த்தபோது, அவர் நினைத்தபடி அதில் வைத்திருந்த தங்கத்தோடு, கம்மல், செயின், மோதிரம் என மொத்தம் 15 பவுனுக்கும் மேற்பட்ட நகைகளும், ரூ.5 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை காணவில்லை. மர்மநபர்கள் யாரோ திருடிச் சென்று விட்டனர்.

போலீசார் விசாரணை இதுகுறித்து மணி கீழ்பென்னாத்தூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வந்து கைரேகையை பதிவு செய்தனர்.

இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை, பணத்தை திருடிச் சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Updated On: 22 May 2022 9:52 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    பல்லடம்; மருத்துவா்களுக்கான ‘மெடி அப்டேட்’கருத்தரங்கு
  2. திருவண்ணாமலை
    அருணாசலேஸ்வரா் கோவிலில் குவிந்த பக்தா்கள்
  3. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் வரும் 4 ம் தேதி முதல் தாராபிஷேகம்
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை
  5. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  6. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  7. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  8. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  9. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  10. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’