விஏஓ அலுவலகம் முன் தீக்குளித்த விவசாயி

விஏஓ அலுவலகம் முன்  தீக்குளித்த விவசாயி
X
கலசப்பாக்கம் அருகே விஏஓ அலுவலகம் முன் தீக்குளித்த விவசாயியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கலசபாக்கம் அருகே நிலத்தின் பட்டா மாற்றம் மற்றும் அடங்கல் சான்றிதழ் வழங்க அலைக்கழிப்பதாக கூறி, விஏஓ அலுவலகம் முன் விவசாயி தீக்குளித்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் அடுத்த கல்லரப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன், இவர் விவசாயி ஆவார்.

இவருக்கு திருமணமாகி லட்சுமி என்ற மனைவியும் மூன்று குழந்தைகளும் உள்ளனர்.

ராமகிருஷ்ணனுக்கு சொந்தமாக நான்கு ஏக்கர் நிலம் துரிஞ்சாபுரம் ஒன்றியம் தேவனாம்பட்டு அருகே ஊத்திரம் பூண்டியில் உள்ளது.

பானிபூரி விரும்பி சாப்பிடுவீங்களா? உங்களுக்கு கேன்சர் வரலாமாம்!

இந்த நிலத்திற்கு பட்டா மாற்றம் மற்றும் அடங்கல் சான்றிதழ் கேட்டு தேவனாம்பட்டு விஏஓ அலுவலகத்தில் விண்ணப்பம் செய்துள்ளார். தொடர்ந்து, கடந்த 10 நாட்களாக விஏஓ அலுவலகம் சென்று சான்றிதழ் குறித்து கேட்டு வந்துள்ளார். ஆனால், கூட்டு பட்டா என்பதால் அடங்கல் வழங்குவதில் விஏஓ காந்தி என்பவர் காலதாமதம் செய்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று மீண்டும் விஏஓ அலுவலகம் சென்ற விவசாயி ராமகிருஷ்ணன், பட்டா மாற்றம் மற்றும் அடங்கல் சான்றிதழ் குறித்து கேட்டுள்ளார்.

ஆனால், நேற்றும் சான்றிதழ் கிடைக்காததால் மன வேதனை அடைந்த ராமகிருஷ்ணன் திடீரென விஏஓ அலுவலகம் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்று உள்ளார்.

வடபாவ் பெண் முகத்தை பச்சைக் குத்திய நபர்..!

கேனில் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை தன் உடம்பின் மீது ஊற்றி தீ வைத்துக் கொண்டார் இதனை பார்த்து பதறிய அங்கிருந்தவர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவி ரசிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கலசபாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விஏஓ அலுவலகம் முன்பு விவசாயி தீக்குளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil