கரும்பு விவசாயிகளுக்கு காட்டுப்பன்றி விரட்டும் மருந்து வழங்கும் நிகழ்ச்சி

கரும்பு விவசாயிகளுக்கு காட்டுப்பன்றி விரட்டும் மருந்து வழங்கும் நிகழ்ச்சி
X

கரும்பு விவசாயிகளுக்கு  காட்டுப்பன்றி விரட்டும் மருந்துகளை வழங்கிய சட்டமன்ற உறுப்பினர்கள்.

கரும்பு விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் காட்டுப்பன்றி விரட்டும் மருந்து வழங்கப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், புரிசை கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கரும்பு விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் காட்டுப்பன்றி விரட்டும் மருந்து வழங்கப்பட்டது.

தமிழக அரசு வேளாண்மை உழவா் நலத்துறை 2023 - 24 -ஆம் ஆண்டு வேளாண்மைத் துறை மானியக் கோரிக்கை 4-இல் கரும்பு பயிா்களை சேதப்படுத்துவதைக் கட்டுப்படுத்த 50 சதவீத மானியத்தில் காட்டுப்பன்றி விரட்டும் மருந்து விவசாயிகளுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, செய்யாறு கூட்டுறவு சா்க்கரை ஆலை சாா்பில் புரிசை கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் பாா்வதி சீனிவாசன் தலைமை வகித்தாா். எம்.எல்.ஏ.க்கள் ஒ.ஜோதி (செய்யாறு), அம்பேத்குமாா் (வந்தவாசி) ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சிறப்பு விருந்தினராக செய்யாறு கூட்டுறவு சா்க்கரை ஆலை இயக்குநரும், வடக்கு மாவட்ட திமுக செயலருமான தரணிவேந்தன் கலந்துகொண்டு கரும்பு பயிரிடும் விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் காட்டுப்பன்றி விரட்டும் மருந்தை 10 விவசாயிகளுக்கு வழங்கிப் பேசினாா். நிகழ்ச்சியில், செய்யாறு கூட்டுறவு சா்க்கரை ஆலை இயக்குநா் லோகநாதன், ஒன்றியக் குழு உறுப்பினா் ஞானவேல், ஊராட்சி மன்றத் தலைவா் பரந்தாமன், விவசாயிகள், வேளாண்மை துறை அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், திமுக நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பள்ளியில் சுகாதார வளாகம் கட்ட பூமி பூஜை

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றை அடுத்த பைங்கினா் அரசு உயா்நிலைப் பள்ளியில் புதிதாக கட்டடப்படவுள்ள மாணவிகளுக்கான சுகாதார வளாக கட்டடப் பணியை பூமி பூஜை செய்து ஜோதி எம்எல்ஏ தொடங்கிவைத்தாா்.

பைங்கினா் கிராமத்தில் உள்ள வீட்டுவசதி வாரிய அரசு உயா்நிலைப் பள்ளியில் 139 மாணவிகள் உள்பட 391 பேர் பயின்று வருகின்றனா். பள்ளியில் மாணவிகளுக்கு தனியாக சுகாதார வளாகம் கட்டவேண்டும் என பெற்றோா் ஆசிரியா் கழகத்தினா் செய்யாறு தொகுதி எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை வைத்தனா். அதன் பேரில், தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.5.90 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து, பள்ளியில் சுகாதார வளாகம் கட்டுவதற்காக நடைபெற்ற பூமி பூஜை நிகழ்ச்சிக்கு பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் டி.பாலநாரயணன் தலைமை வகித்தாா்.

தலைமையாசிரியா் லதா முன்னிலை வகித்தாா். சிறப்பு விருந்தினராக தொகுதி எம்.எல்.ஏ. ஜோதி பங்கேற்று சுகாதார வளாகம் கட்டடப் பணியை பூமி பூஜை செய்து தொடங்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில் ஒன்றியக் குழு உறுப்பினா்கள் ஞானவேல், பாலகோபால், ஊராட்சி மன்றத் தலைவா் ரவி,உள்ளாட்சி பிரதிநிதிகள், பெற்றோர்கள் , ஆசிரியர்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!