செய்யாற்றில் விவசாயிகள் தொடர் போராட்டம்

செய்யாற்றில் விவசாயிகள் தொடர் போராட்டம்
X

கூட்டுச்சாலை அருகே காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.

செய்யாறு அருகே சிப்காட் அலகு 3 திட்டத்தை கைவிடக் கோரி விவசாயிகள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு சாா் -ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 78 மனுக்கள் வரப்பெற்றன.

செய்யாறு வருவாய்க் கோட்ட அளவிலான பொதுமக்கள் குறைதீா் கூட்டம் சாா் - ஆட்சியரின் நேர்முக உதவியாளா் குமாரவேல் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தின் போது சேத்துப்பட்டு, வந்தவாசி, வெம்பாக்கம், செய்யாறு ஆகிய வட்டங்களில் இருந்து பொதுமக்கள் சாா்பில் 78 மனுக்கள் அளிக்கப்பட்டன.

இந்த மனுக்கள் மீதும், ஏற்கெனவே பெறப்பட்டு நிலுவையில் உள்ள மனுக்கள் மீதும் விரைவாக நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

விவசாயிகள் தொடர் போராட்டம்

செய்யாறு உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம் நடத்த போவதாக அறிவிக்கப்பட்டதால் வேலூர் சரக டி.ஐ.ஜி. தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

செய்யாறு சிப்காட் தொழில்பேட்டை விரிவாக்கப் பகுதி எனப்படும் அலகு - 3 பகுதியில் அனக்காவூா் ஒன்றியம் தேத்துறை உள்வட்டத்தைச் சேர்ந்த வடஆளப்பிறந்தான், மேல்மா , தேத்துறை, இளநீா்குன்றம், குறும்பூா், நா்மாபள்ளம், அத்தி, வீரம்பாக்கம் உள்ளிட்ட கிராமங்களில் சுமாா் 3174 ஏக்கரில் விவசாய நிலங்கள் இருந்து வருகின்றன.

சிப்காட் தொழிற்பேட்டைக்கு மேல்மா பகுதி விவசாயிகளுக்கு சொந்தமான நிலங்களை கையப்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மேல்மா உள்ளிட்ட 9 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் சார்பில் மேல்மா கூட்ரோட்டில் கடந்த ஜூலை மாதம் 7-ந் தேதி காத்திருப்புப் போராட்டத்தை தொடங்கினர்.

இந்த போராட்டம் நேற்று 100-வது நாளை எட்டியது. இதையொட்டி நேற்று குறை தீர்வு நாள் கூட்டத்தின் போது செய்யாறு உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்ட குழு சார்பில் விவசாயிகள் உண்ணாவிரதம் இருக்க போவதாக அறிவித்தனர். போலீஸ் தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டதால் உண்ணாவிரதத்தை கைவிட்டனர்.

விவசாயிகள் உண்ணாவிரதம் இருக்க அதிகளவில் திரண்டு வருவாா்கள் என்றும், அனுமதி மறக்கப்பட்டாலும் திடீரென விவசாயிகள் வந்து விடாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வேலூா் சரக டிஐஜி முத்துசாமி தலைமையில் திருவண்ணாமலை மாவட்ட எஸ்பி காா்த்திகேயன் மேற்பாா்வையில் 200-க்கும் மேற்பட்ட போலீஸாா் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனா்.

பின்னர் விவசாயிகள் மேல்மா கூட்டுச்சாலை அருகே அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்