வேளாண் அதிகாரிகளை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

வேளாண் அதிகாரிகளை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
X

வடிகால் வசதி இல்லாததால் நீரில் மூழ்கியுள்ள பயிர்கள்

செய்யாறு ஆர்டிஓ அலுவலகம் அருகே வேளாண் அதிகாரிகளை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் செய்யாறு பகுதியில் 30 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்ட சம்பா நெல், மணிலா , போன்ற தோட்ட பயிர்களில் சுமார் 15,000 ஏக்கர் அளவில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையால் நீர் தேங்கி வடிகால் வசதி இல்லாததால் பாதிப்பு அடைந்துள்ளது.

மேலும் மழை பெய்து 10 நாட்கள் கடந்தும் சரியான முறையில் கணக்கு எடுக்காத வேளாண்துறை உழவன் நண்பர்கள், வேளாண் உதவி அதிகாரிகளை கண்டித்து செய்யாறு ஆர்டிஓ அலுவலகம் முன் விவசாய சங்கத் தலைவர் புருஷோத்தமன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் பாதிப்படைந்த நெல்மணி முளைத்த கதிர்களை கையில் வைத்துக்கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் தமிழ் மணியிடம் கோரிக்கை மனுவை அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட அவர் நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!