செய்யாறு அருகே நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை ஆய்வு மேற்கொண்ட கலெக்டர்
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் செயல்பட்டுவரும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கான விடுதியில் ஆட்சியர் முருகேஷ் ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வட்டம் அனக்காவூர் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூபாய் மூன்று லட்சம் மதிப்பீட்டில் மூங்கில் தோப்பு வளர்ப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை ஆட்சியர் முருகேஷ் அவர்கள் நேரில் ஆய்வு செய்தார் . மேலும் சின்ன செங்காடு கிராமத்திலுள்ள அங்கன்வாடி குழந்தைகள் மையத்திற்கு சென்று அங்கு குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவை ஆய்வு செய்தார்.
அதன் பின்னர் செய்யாறு ஒன்றியம் திரும்பூண்டி ஊராட்சியில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூபாய் 32 லட்சம் செலவில் நடந்து வரும் மரக்கன்றுகள் வளர்க்கும் பணிகள், அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் நடந்துவரும் புனரமைப்பு பணிகள், பிரதம மந்திரி கிராம சாலை திட்டத்திற்கு ரூபாய் 25 லட்சம் செலவில் நடைபெற்றுவரும் சாலை பணிகள் ஆகியவற்றை ஆய்வு செய்தார்.
பின்னர் செய்யாறு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் செயல்பட்டுவரும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கான விடுதியில் ஆய்வு செய்து மாணவர்களிடையே குறைகளை கேட்டறிந்தார். ஆய்வின் போது கூடுதல் ஆட்சியர் பிரதாப் ,செய்யாறு ஆர்டிஓ விஜயராஜ் ,உதவி இயக்குனர் ஊராட்சிகள் சுரேஷ்குமார் ,உதவி செயற்பொறியாளர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வட்டாட்சியர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu