திருவண்ணாமலை அருகே கோவில் பூட்டை உடைத்து அம்மன் தாலி திருட்டு

திருவண்ணாமலை அருகே கோவில் பூட்டை உடைத்து அம்மன் தாலி திருட்டு
X

அம்மன் தாலி திருட்டு போன மாரியம்மன் கோவில்.

திருவண்ணாமலை மாவட்டம் தூசி அருகே கோவில் பூட்டை உடைத்து அம்மன் தாலி திருட்டு போனதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா தூசி அருகே பல்லாவரம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு தினமும் பூஜைகள் நடைபெற்று வருகிறது. ஆடி மாதத்தையொட்டி தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர்.

இன்று காலை நடைதிறப்பதற்காக ஆறுமுகம் பூசாரி கோவிலுக்கு சென்றார். அப்போது கோவிலில் பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து கிராம நாட்டாமை ஏழுமலை தூசி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.அப்போது அம்மன் கழுத்தில் அணிந்திருந்த 4 கிராம் தாலி திருட்டு போனது தெரிய வந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!