திருவண்ணாமலை மாவட்ட தேர்தலில் 3 தம்பதியினர் வெற்றி

திருவண்ணாமலை மாவட்ட தேர்தலில் 3 தம்பதியினர் வெற்றி
X

வெற்றி பெற்றவர்கள். 

திருவண்ணாமலை மாவட்டத்தில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட மூன்று தம்பதியினர் வெற்றி பெற்று உள்ளனர்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திருவண்ணாமலை மாவட்டத்தில் போட்டியிட்ட திமுக மற்றும் பாமக சார்பில் போட்டியிட்டு 3 தம்பதிகள் வெற்றி பெற்றுள்ளனர். திருவத்திபுரம் (செய்யாறு) நகராட்சியில் திமுக சார்பில் 18-வது வார்டில் மோகனவேல் மற்றும் 13-வது வார்டில் அவரது மனைவி பேபி ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.

இதேபோல் பாமக சார்பில் 12-வது வார்டில் சீனுவாசன், 20-வது வார்டில் அவரது மனைவி பத்மபிரியா ஆகியோர் . வெற்றி பெற்றுள்ளனர். சேத்துப்பட்டு பேரூராட்சியில் திமுக சார்பில் 6-வது வார்டில் நகர செயலாளர் முருகன் மற்றும் 3-வது வார்டில் அவரது மனைவி சுதா ஆகியோர் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர்.

வெற்றி பெற்றுள்ள மூன்று தம்பதியினருக்கும், அனைத்து தரப்பு மக்களும் மற்றும் அரசியல் கட்சியினரும் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!