ஆரணியில் கூடுதல் அரசு பஸ் இயக்கக்கோரி கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்

ஆரணியில் கூடுதல் அரசு பஸ் இயக்கக்கோரி கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்
X

செய்யாறு-ஆரணி வழித்தடத்தில் கூடுதல் அரசு பஸ்கள் இயக்கக்கோரி கல்லூரி மாணவ, மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

செய்யாறு-ஆரணி வழித்தடத்தில் கூடுதல் அரசு பஸ்கள் இயக்கக்கோரி கல்லூரி மாணவ, மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் அரசு கலைக்கல்லூரி இல்லாத காரணத்தால் செய்யாறில் இயங்கி வரும் அரசு கலை கல்லூரிக்கு மாணவர்கள் பஸ்சில் செல்ல வேண்டிய நிலை உள்ளது. தினமும் ஆரணி, படவேடு, களம்பூர், கண்ணமங்கலம் பகுதிகளிலிருந்து சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் செய்யாறு அரசு கல்லூரிக்கு பஸ்சில் பயணம் செய்வது வழக்கம். காலை வகுப்பு மற்றும் மதிய வகுப்பு என 2 வேளைகளிலும் சுமார் 250 மாணவ மாணவிகள் ஆரணியில் இருந்து செய்யாற்றில் உள்ள அரசு கல்லூரிக்கு அரசு பஸ்சில் சென்று வருகின்றனர்.

4 பஸ்களில் செல்லும் அளவுக்கு மாணவர்கள் கூட்டம் இருந்தாலும் ஆரணியிலிருந்து செய்யாறு வழித்தடத்தில் 2 அரசு பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகிறது. இதனால் மாணவ மாணவிகள் ஒரு பஸ்சில் 100 முதல் 150 மாணவ மாணவிகள் வரை செல்லும் அவல நிலை ஏற்படுகிறது. ஆரணியிலிருந்து செய்யாறுக்கு ஆபத்தான நிலையில் மாணவ மாணவிகள் பயணம் செய்து வருகின்றனர்.

கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இதேபோல் பஸ் பிரச்னை ஏற்பட்டு மாணவ மாணவிகள் பலமுறை போராட்டங்களை நடத்தி கூடுதல் பஸ்கள் இயக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக ஒரு அரசு பஸ் மட்டுமே இயக்கப்படுவதாக தெரிகிறது. இதனால் பாதிப்படைந்த கல்லூரி மாணவ, மாணவிகள் செய்யாறு ஆரணி வழித்தடத்தில் கூடுதலாக அரசு பஸ்களை இயக்கக்கோரி செய்யாறு புறவழிச்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு அரசு பஸ்சை சிறைபிடித்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த செய்யாறு போலீசார் மாணவ மாணவிகளை சமரசம் செய்தனர். பின்னர் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணிமனை அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு அரசு பஸ்சை வரவைத்து மாணவிகளை ஏற்றி அனுப்பினர். இதுகுறித்து அரசு போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் கேட்டபோது, விரைவில் கூடுதல் பஸ்கள் இயக்கப்படும் என உறுதி அளித்தனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்