திருவண்ணாமலை அருகே மின்கம்பி அறுந்து விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

திருவண்ணாமலை அருகே மின்கம்பி அறுந்து விழுந்து தொழிலாளி உயிரிழப்பு
X

மின்கம்பி அறுந்து விழுந்து  தொழிலாளி உயிரிழந்த இடம்.

திருவண்ணாமலை மாவட்டம் தானிப்பாடி அருகே மின்கம்பி அறுந்து விழுந்து தொழிலாளி உயிரிழந்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு தாலுகா தானிப்பாடி அருகில் உள்ள கொளமஞ்சனூர் ஊராட்சி தேவரடியார்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் காசி (வயது 65). கூலி தொழிலாளி. இவர் இன்று காலை வீட்டின் முன் உள்ள குழாயில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தார்.

அப்போது மேலே இருந்த மின்சார கம்பி திடீரென அறுந்து காசி மீது விழுந்தது. இதில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த தானிப்பாடி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!