ஓய்வுபெற்ற அரசு ஊழியரிடம் வழிப்பறி: இருவர் கைது
செங்கத்தில் வழிப்பறி செய்த ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த கோவிந்தராஜ், அங்கையா
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம், G.N.பாளையம் கிராமம், மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த மனோகரன். செங்கம் அரசு மருத்துவமனையில் மலேரியா தொற்றுநோய் களப்பணியாளராக பணியாற்றி 30.04.2021 அன்று ஓய்வு பெற்றார்.
இவர் தனது ஓய்வூதிய பணம் ரூபாய் மூன்று லட்சத்தை (Rs.3,00,000/-) செங்கம் SBI வங்கியில் இருந்து எடுத்துக்கொண்டு செங்கம் அரசு மருத்துவமனையை நோக்கி வந்தபோது, இதனை நோட்டமிட்ட அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள், செங்கம் அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள முனியப்பன் கோயில் அருகில் பணத்தை பறித்து கொண்டு ஓடிவிட்டனர்.
இது குறித்து செங்கம் காவல்நிலையத்தில் அளித்த புகாரினை அடுத்து, செங்கம் காவல் நிலையத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டு, திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்பவன் குமார் ரெட்டி உத்தரவுப்படி, செங்கம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சரவணகுமரன் அவர்களின் மேற்பார்வையில், தனிப்படை அமைக்கப்பட்டு, சம்பவம் நடந்த இடத்தில் இருந்த CCTV-காட்சிகளை ஆராய்ந்தும் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட சைபர்கிரைம் காவல்நிலையத்தின் உதவியுடன் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் செங்கம் அடுத்த மேல்புழுதியூர் பாலத்தின் கீழ் மனோகரனிடம் வழிப்பறி செய்த ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த கோவிந்தராஜ், அங்கையா இருவரும் தங்கி இருப்பதாக, தனிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலினை அடுத்து விரைந்து சென்ற தனிப்படையினர் இருவரையும் சுற்றிவளைத்து கைது செய்து, ரூபாய் 3,00,000/- பணம் மற்றும் பதிவெண் இல்லாத ஒரு இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பினர்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu