செங்கம் பேரூராட்சியில் மரக்கன்றுகள் நடும் பணி தொடக்கம்

செங்கம் பேரூராட்சியில் மரக்கன்றுகள் நடும் பணி   தொடக்கம்
X

சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி கலந்து கொண்டு பூமி பூஜை செய்து மரக்கன்று நடும் பணியை தொடங்கி வைத்தார்.

செங்கம் பேரூராட்சியில் மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட 18 வார்டுகள் திடக்கழிவு மேலாண்மை திட்ட வளாகம் உள்ளிட்ட பகுதிகளில் மரக்கன்று நடும் பணி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி செயல் அலுவலர் உமா மகேஸ்வரி வரவேற்றார். இதில் சிறப்பு விருந்தினராக சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி கலந்து கொண்டு பூமி பூஜை செய்து மரக்கன்று நடும் பணியை தொடங்கி வைத்தார்.

இதில் முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் சாதிக் பாஷா, துணைத் தலைவர் அப்துல் சர்தார்,கூட்டுறவு சங்க தலைவர் முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!