திருவண்ணாமலை மாவட்டத்தில் ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஸ்டாலின் பிறந்தநாள் விழா  கொண்டாட்டம்
X

திருவண்ணாமலை மாவட்டத்தில் குழந்தைகளுக்கு நோட்டு புத்தகம் வழங்கி ஸ்டாலின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் தமிழக முதல்வரும் தி.மு.க. தலைவருமான மு க ஸ்டாலின் பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது..

செங்கம் தொகுதியில் வாழவச்சணூர் ஊராட்சியில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் , அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு கொடி யேற்றி ஊராட்சி தி.மு.க. சார்பாக நடுநிலைப் பள்ளியில் பயிலும் 400 மாணவர்களுக்கு நோட்டு பேனா பென்சில் மற்றும் இனிப்பு வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது.

தண்டராம்பட்டு நீதிமன்ற வளாகத்தில் தண்டராம்பட்டு நீதிமன்ற வழக்கறிஞரணி அமைப்பாளர் பாண்டுரங்கன் , வழக்கறிஞர் நீலகண்டன்,அவர்கள் தலைமையில் இனிப்பு வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது.

தானிப்பாடி ஊராட்சி தண்டராம்பட்டு மேற்கு ஒன்றிய கழக செயலாளர் மு.பன்னீர்செல்வம் , மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பொன் தனுசு, மாவட்ட கவுன்சிலர் முத்துமாறன் ஆகியோர் இந்நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!