செங்கம் வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு

செங்கம் வாக்கு எண்ணும் மையத்தில்  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு
X

செங்கம் வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பவன் குமார் ரெட்டி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பவன் குமார் ரெட்டி ஆய்வு செய்தார்.

செங்கம் பேரூராட்சியில் பதிவாகும் வாக்குகள் அங்குள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் எண்ணப்பட உள்ளன. இந்நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அந்த மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வின் போது தேர்தல் முடிந்தவுடன் வாக்குப்பெட்டிகள் வைக்கும் அறை அந்த அறைக்கு தேவையான மின் வினியோகம், கதவு, ஜன்னல் போன்றவை சரியாக உள்ளனவா என பார்வையிட்டார் . மேலும் அந்த அறைக்குச் செல்லும் வழிகளையும் பார்வையிட்டார்.

அதைத்தொடர்ந்து வாக்கு என்னும் இடங்களை ஆய்வு செய்த அவர் வேட்பாளர்கள் வாக்கு சாவடி முகவர்கள் அமரும் இடம் போன்றவற்றை பார்வையிட்டு வாக்கு எண்ணும் நாளன்று தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின்போது டிஎஸ்பி சின்ராஜ், காவல் ஆய்வாளர் சரவணன், பேரூராட்சித் தலைவர் ரமேஷ் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!