கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் குண்டர் சட்டத்தில் அடைப்பு

கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் குண்டர் சட்டத்தில் அடைப்பு
X

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அ.பவன் குமார்

செங்கம் அருகே கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஆறு பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்

செங்கம், புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்த முருகன் என்பவரின் மகன் வெங்கடேசனை முன்விரோதம் காரணமாக செங்கம் GN.பாளையம் கிராமத்தைச் சேர்ந்த மதி, வசந்த், சுரேஷ், வல்லரசு, வினோத், ஏழுமலை ஆகிய ஆறு நபர்களும் வெட்டி கொலை செய்ததாக புதுப்பாளையம் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், ஆறு பேரும் சிறையிலடைக்கப்பட்டனர். .

தன்டராம்பட்டு, கீழ்ராவந்தவாடி எதிர்மேடு கிராமத்தை சேர்ந்த விஜி என்பவர் தானிப்பாடி பேருந்து நிலையத்தில் கத்தியைக் காட்டி வழிப்பறியில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இவர்கள் தொடர்ந்து சட்டவிரோத செயலில் ஈடுபடுவதை தடுப்பதற்காக குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் அடைக்க, எஸ்பி .பவன் குமார், மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ், மேற்கண்ட 7 நபர்களையும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்து, வேலூர் மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் மட்டும் கள்ளச்சாராயம், கொலை, கஞ்சா, பாலியல் குற்றம் போன்ற குற்றங்களுக்காக 105 பேர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!